பக்கம்:ஆடும் தீபம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



110

ஆடும்


அல்லிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

போங்க ஆச்சி’ ! கையைக் கழுவிவிட்டு மானைப்போலத் துள்ளி அறைக்கு ஓடினாள் அல்லி.

படுக்கையில் புரண்ட அல்லி மீண்டும் கனவில்ஆழ்ந்தாள். கனவுகளைப்போல உயிருக்குப் பலம் தரக்கூடியது உலகத்தில் வேறு என்ன இருக்கிறது? எதுவுமில்லை. ஆகையினால், வாழ்க கனவுகள்! ‘உனக்கு ஒரு தபால் வந்திருக்கும்மா

‘அவுங்க லெட்டராத்தான் இருக்கும். இப்ப வேறுயாரு நமக்குக் கடுதாசு எழுதப் போறாங்க?’’

!”

கடிதத்தை எடுத்தாள்.

“அவுங்கள்து இல்லியே? யாரு, சுகுணாவா...? ...பேரே புதுசா இருக்கே. ...’ கடிதத்தைப் பரபரப்புடன் படிக்கத்துவங்கினாள். அவளது உதடுகள் நடுங்கின......!

‘அன்புள்ள அல்லி,

முன்னே பின்னே தெரியாம. லெட்டர் எழுதறேன்னு தப்பா நினைச்சுக்காதே; சந்தர்ப்பம் இப்படி ஆயிடுச்சு.

என்னோட அத்தான் அருணாசலத்தை நீ கட்டிக்கப்போறியாமே? இது உனக்கே நல்லா இருக்கா?

அவுங்க அப்பா-என்னோட அம்மாவோட அண்ணன். எங்க அம்மா சாகிறபோது அவுங்க கையாலேதான் என்னைப் பிடிச்சுக் கொடுத்திட்டுச் செத்தாங்க, அதிலேருந்து அதுக்கு நான்தான்; எனக்கு அதுதான்'னு பெரியவங்களே தீர்மானிச்சு வச்சுட்டாங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/111&oldid=1317592" இலிருந்து மீள்விக்கப்பட்டது