பக்கம்:ஆடும் தீபம்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆடும்

113


போகிறாள். ஆடும் தீபத்தைப் படித்த அனைவர் உள்ளங்களிலும் அழியாச் சித்திரமாக ஒளி வீசப் போகிறாள்.

கதையும் அதன் வளர்ச்சியும், கதாநாயகியும் மற்ற பாத்திரங்களும், அவர்களின் இன்ப துன்ப அனுபவங்களும் ஆகிய எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தப் படைப்பைத் திட்டமிட்டபடி வெற்றிகரமாகத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திக் கொண்டு போகும் உமாவின் துணை ஆசிரியர், திரு பூவை எஸ். ஆறுமுகத்தின் பணியாற்றும் திறன் அல்லவா இவ்வளவுக்கும் காரணம்? முதற் பாராட்டு அவருக்குத்தான்!

கூட்டுறவு முறை சரியாக இயக்கப் பெற்றால், எந்தத் துறையிலும் நல்ல பயனை அளிக்கும் என் பதற்கு இந்த ஆடும் தீபம்’ தொடர்கதையே ஓர் அத்தாட்சி

எல்லார்வி