பக்கம்:ஆடும் தீபம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

115


அல்லியோட முகத்திலே புது மலர்ச்சி ஒளி வீசுது!’ என்று சற்று முன் தமக்குப் பலகாரம் அளிக்கிற போது நாச்சியாரம்மா சொன்னதைக் கேட்டதும் ராஜநாயகத்துக்குப்பலகாரமே இறங்கவில்லை. அங்கே இருப்பே கொள்ளவில்லை. உடனே அல்லியைப் பார்க்கவேண்டும் என்று அவர் உள்ளம் பரபரத்தது. இந்த மலர் முகத்தைக் காணும் ஆவலால் அவர் அங்கே விரைந்து வந்தார். -

அல்லி எழுந்து நின்றாள். அவர் குரலிலே இழையிட்ட மகிழ்வுணர்ச்சி புதிய செய்தி ஏதோ ஒன்றை அவர் கொண்டு வருகிறார் என்று கட்டியம் கூறிற்று. தன் முகத்தை அவர் பார்வையிலிருந்து மறைத்துக் கொள்ள முயன்றவள் அசப்பிலே லாகவமாக அவர் முகத்தைக் கவனித்தாள். அவரது குரல் கூறியது.எதுவோ அதையே தான் அவர் முகமும் காட்டிற்று.புதிய ஊரில், புதிய மனிதர்களிடையே, புதிய நிலையில் மகிழ்ந்து, முற்றும் புத்தம் புதிய வாழ்க்கையில் ஈடுபட இருக்கிற நிலை. எந் நேரமும் புதுமை,புதுமை’ என்று கூவியழைத்துக் கொண்டிருந்த அவளுடைய மலர்ந்த உள்ளத்திற்கு இப்போது எந்தப் புதுமையும் வேண்டி இருக்கவில்லை. ‘புதுமை ஒரு புற்று; அதனுள் இருப்பது பாம்பு வேண்டாம் புதுமைi’ என்று ஓலமிட்டது உள்ளம்.

‘வாங்க! சற்று ஒருக்களித்த நிலையில் நின்று கொண்டிருந்தாள்.

அனுபவம் சொல்லாததை வேறு எது சொல்லும் ராஜநாயகத்தின் குடும்ப அனுபவம்-உலக அனுபவம் கொஞ்சமா? அல்லியின் கரகரத்த குரல் அவரை அதிர்ச்சியுற வைத்தது. அன்று வரை இல்லாத உணர்வு அவரைத் தூண்டிற்று. பாய்ந்து அவள் முன் புறத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/116&oldid=1318495" இலிருந்து மீள்விக்கப்பட்டது