பக்கம்:ஆடும் தீபம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

117



‘கல்யாணத்தை நிறுத்திடுறதா?”

அவளின் உடம்பு சிலிர்த்தது பின்னே?...நடக்கிறதா?...சுகுணா?... அவளோடகதி?...”

அவள் முகத்திலே உணர்ச்சிகள் புரிந்த ஜாலத்தை அவர் கவனிக்க முயன்றார்; அவள் மறைத்துக் கொள்ள முயன்றாள்

‘அல்லி, இதோ, என்னை நிமிர்ந்து பாரம்மா!’

அவள் மெல்ல நிமிர்ந்தாள்.

“என்ன யோசனை? என்ன குழப்பம்!”

‘ஒண்ணுமே இல்லீங்க"-மறுபடியும் அவள் சிரிக்க முயன்றாள்.

‘பின்னே ஏன் அம்மா என்னவோ போல இருக்கே? ஒரு வேளை-அப்பாவையும் அம்மாளையும் நினைச்சுக்கிட்டியா? இந்த நல்ல நேரத்திலே அவங்க இல்லேயேன்னு வருத்தப்படுறியா?”

அல்லியின் கண்கள் குபீரென்று நீரைக் கக்கின. உள்ளம் ஒரு நொடிக்குள் பல மைல்களையும் பல ஆண்டுகளையும் கடந்து பின் நோக்கிப் பறந்தது: மாங்குடியை அடைந்தது; பெற்றாேரைக் கண்டது. அவளால் தாங்க முடியவில்லை. இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு வேகமாக ஓடும். புது, வெள்ளம் சிறு கண்ணியைக் கண்டதும் குபீரென்று அதில் பாய்வது போல அல்லியின் நெஞ்சில் வேறு வகையில் கொந்தளித்துக்கொண்டிருந்த துயர உணர்ச்சி, ராஜநாயகத்தால் நினைப்பூட்டப்பெற்ற பெற்றாேர் நினைவால் அவள் கண் மடையை உடைத்துக் கொண்டு குபீரென்று வெளிப்பட்டது. முன்றானையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/118&oldid=1318498" இலிருந்து மீள்விக்கப்பட்டது