உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



118

ஆடும்


முகத்தை மூடிக் கொண்டு விம்மி, விசித்து அழத் தொடங்கினாள்.

“பார்த்தியா! நான் நினைச்சது சரியாய்ப் போச்சு,” என்று கூறிப் பெருமூச்செறிந்தார் ராஜநாயகம். பிறகு இதமான மொழிகளால், அவளுக்குத் தேறுதல் சொல்ல முற்பட்டார். இப்போது, அவர் உடம்பில் படபடப்பு இல்லை; குரலில் பதற்றமும் இல்லை.

“ஒரு வேளை உனக்கு இந்தக் கல்யாண விஷயத்திலே ஏதாச்சும் மனக்குறை இருக்குமோண்ணு முதல்லே நினைச்சேன். அந்த நினைப்பு என்னையே ஒரு ஆட்டம் ஆட்டி வச்சிட்டுது. இப்போ அது இல்லேன்னு தெரிஞ்சதும், கொஞ்சம் நிம்மதி ஏற்படுது. இந்த மாதிரி சமயத்திலே, ஒரு பொண்ணு பெத்தவங்களை நினைக்கப்படாதின்னு எந்தப் பாவியும் சொல்ல மாட்டாங்க. ஆனா, நான் என்ன சொல்றேன்னா, புத்திசாலியான நீ…”

“பு…த்…தி…சாலி!” அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

“அம்மா? ஏன் அலுத்துக்கிறே? உன் புத்திசாலித்தனத்துக்கு என்ன? உன் சம்பந்தமா என் மனசிலே உண்டான தகாத நினைப்பை, ஒரு பார்வையாலே, ஒரு சொல்லாலே முளையிலே கிள்ளி எறிஞ்ச காரியத்தை விட வேற என்னம்மா வேணும், உன்னோட புத்திசாலித்தனத்தை நான் கொண்டாட? இது மாத்திரம் இல்லே அல்லி, உன் கிட்டே சொல்லிக்கிறதிலே என்ன? உன்னாலே கண் திறந்து விடப்பட்ட நான், உன் சம்பந்தமா மாத்திரம் திருந்தல்லே; பொதுவாகவே ஒரு நல்ல திருத்தத்தை அடைஞ்சிட்டேன். உண்மையைச் சொல்லணும்னா. நீ இங்கே வந்து சேர்ந்தப்புறந்தான்—உன்னாலேதான்—நான் நல்லவன் ஆனேன், அல்லி.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/119&oldid=1689443" இலிருந்து மீள்விக்கப்பட்டது