பக்கம்:ஆடும் தீபம்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுதீபம்

121


பதிந்தது. சற்று முன் அங்கே மலர்ந்த சிரிப்பின் சுவடு எங்கே? அந்த முகம் இதற்குள் ஏன் இப்படி இருண்டு விட்டது? அவர் உள்ளம் குழம்பியது. அதே சமயத்தில் நாச்சியாரம்மா அங்கே வந்தாள். ‘காரிலே யாரோ வந்திருக்காங்க, உங்களைத் தேடிக்கிட்டு,’ “ என்றாள். ராஜநாயகம் பெருமூச்சுடன் எழுந்தார்; நிதானமாக நடந்தார். அவர் தலை மறைந்ததும் அல்லி படுக்கையின் மேல் விழுந்தாள். அவ்வளவு நேரமும் ராஜநாயகம் பொழிந்து தள்ளிய அன்பு மொழிகளால் அவள் உள்ளம் துன்பத்தை மறந்திருந்தது. அவருக்குத்தான் அவளிடம் எத்தகைய வாத்சல்யம்! பெற்ற தந்தை ஒருவர் தம் மகளிடம் இத்துணை வாத்சல்யம் செலுத்துவாரா? அல்லிக்கு அது பற்றி ஒன்றுமே தெரியாது. அவளுக்குத்தான் அந்த வாய்ப்பு இல்லையே! ராஜநாயகம் சொல்வது போல, எடுப்பில் அவளிடம் எப்படியோ நடந்து கொள்ளத் தலைப்பட்ட அவர் பின்னர் எப்படித்தான் மாறிவிட்டார்! எடுப்பிலிருந்தே அவர் அவளிடம் வாத்சல்ய உணர்வுடையவராக இருந்திருந்தால், அவருடைய தந்தையன்பு இத்தனைச் சிறப்பை அடைந்திருக்காதோ? ராஜநாயகத்தைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டே வந்த அவள் செவியில் அவருடைய சொற்களில் சில ரீங்காரமிட்டன. நீ புத்திசாலி...என்னைத் திருத்தினே; அருணாசலம் பயலை மயக்கித் திருத்தினே; இன்னும் இப்படி எத்தனை பேரை உன் அழகாலே ஆட்டிவச்சு, மதி யாலே திருத்தப் பிறந்திருக்கியோ?”

அல்லி சர்ப்பம் சீறுவது போல் பெருமூச்செறிந்தாள். “நான் மத்தவங்களைத் திருத்திக் குட்டிச் சுவராய்ப் போனேன்; என்னையே என்னாலே திருத்திக்க முடியாமெ இதோ சந்தியிலே நிக்கிறேனே! அவளின் அடி மனம்