122
ஆடும்
குமுறிற்று. ‘புத்தி உள்ளவளா இருந்திருந்தா, ஓடற ரெயிலிலே முன்னே பின்னே தெரியாத ஒரு காளையைச் சிநேகம் புடிச்சிருப்பேனா? அதோட பலன் இப்ப என்ன ஆச்சு? ‘விடிஞ்சா கல்யாணம்; பிடிடா பாக்கு வெத்திலையை’ன்னு இருக்கிற நிலைமையிலே பூகம்பம்னு ஏதோ சொல்லுவாங்களே, அந்த மாதிரி இல்ல, வெடிச்சு வருது சேதி! அருணாசலம் பார்வைக்கு ஒரு மாதிரியா இருந்தாலும், பேச்சு, நடவடிக்கை எல்லாம் ஒரு மாதிரியா இருந்தாலும், மனசு சுத்த வெள்ளை’ன்னு வாத்தியாரையாவும் சொன்னாங்க. ஆச்சியம்மாவும், சொன்னாங்க. சுகுணாவோட கடுதாசு என்ன சொல்லுது? கறை படிஞ்ச, கவலை நிறைஞ்ச நெஞ்சின்னு இல்லே சொல்லுது? வயசுப் பொண்ணு ஒருத்தி, மனசு விட்டு எழுதக் கூடிய அளவு கடுதாசிலே எழுதியிருக்கா. எழுதாத சங்கதி இன்னம் என்ன, என்ன இருக்குமோ?…’
வாத்தியாரையாவின், ‘ஓகோ’ என்ற சிரிப்பொலி, அவள் கவனத்தை ஈர்த்தது. அடுத்து அவர் பேசிய சொற்கள், சிலவும் காதிலே விழுந்தன; கவனித்தாள்.
“நல்லாச் சொன்னீங்க பலராமையா; நல்லாச் சொன்னீங்க!”
“அது சரி; எதுக்கு நீங்க இப்போ இப்படிச் சிரிச்சீங்க?”
“எதுக்கா? அல்லிக்குப் பேச வராது; கொச்சைத் தமிழ்தான் பேச வரும்னு நான் சொல்லி வாய் மூடுறதுக்குள்ளே, ‘அந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம்; நான் கவனிச்சுக்கிறேன்’ன்னு நீங்க சொன்னதும், எனக்குச் சிரிப்புத் தாங்க முடியல்லீங்க. இப்பவெல்லாம் சினிமாவிலே பாட்டுக்குத்தான் இரவல் குரல்னா, நீங்க பேச்சுக்குக் கூட இரவல் குரல் ஏற்பாடு பண்ணிடுவீங்க போல் இருக்கேன்னு நினைச்சேன். அப்படியானா பிரபல நடிகர் நடி-