பக்கம்:ஆடும் தீபம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



124

ஆடும்


‘ வச்சிருக்கிற முகூர்த்தத்திலே கல்யாணம் நடக்கட்டுங்க, அப்புறம் படப்பிடிப்பை வச்சுக்கிடுறது.”

‘அதுக்கு அல்லியோட புருசன்தான் சம்மதிக்கணும். அவன் கூடச் சம்மதிச்சிடுவான். அவனைச் சேர்ந்த பெரியவங்க சம்மதிக்கணுமில்லே?”

“உங்களைப் போல உள்ள பெரியவங்க, அனுபவசாலிங்க எடுத்துச் சொல்லித்தான் சம்மதிக்க வைக்கணும். எத்தனையோ பேர் கல்யாணங் கட்டிக்கிட்ட அப்புறமும் ஆடவும் பாடவும் நடிக்கவும் உத்தியோகம் பார்க்கவும் செய்யலீங்களா?’

“பலராமையா, ஒரு படம் எடுத்தாலே உலக அனுபவம் ஒண்னுகூடவிடாமெதெரிஞ்சிடும்.நீங்களோ உருப்படியா மூணு படம் எடுத்து நல்ல பலனையும் கண்டவங்க. இப்படியே பேசறீங்களே? கலைப்பித்தும் பணப்பித்தும் காரணமா எத்தனை பேரோட வாழ்க்கையிலே பிளவு ஏற்பட்டிருக்கு? அதை நீங்க எண்ணிப்பார்க்கவே இல்லையா? பகிரங்கமா பிளவு ஏற்படாமப் போனாலும், உள்ளுக்குள்ளே குமைஞ்சுகிட்டிருக்கிற உள்ளங்கள் எத்தனை தெரியுமா? இதோ பாருங்க. நீங்க பட முதலாளி; பெரிய மனிதர் என்னைப் பொருட்டாக்கி என் இடம் தேடிவந்து இவ்வளவு நேரம் பேசறீங்க. உங்க மனசை சடக்குனனு முறிக்கப் படாதுன்னு நானும் என்னவோ பேசிக்கிட்டே வந்தேன். என் மக என் நெஞ்சிலே மண்ணை அள்ளிப்போட்டுட்டுப் போயிட்டா.அதோட ஸ்தானத்திலே தெய்வமாய்ப் பார்த்து. இந்தப் பொண்ணு அல்லியைக் கொண்ணாந்து என்கிட்டே ஒப்படைச்சிருக்கு. அது வளமனையிலே வாழப் பிறந்த பொண்ணு, அத்தோட வாழ்க்கையைப் பாழ் செய்ய நான் விரும்பல்லே, அதுக்கும் விருப்பம் இருகாது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/125&oldid=1322046" இலிருந்து மீள்விக்கப்பட்டது