பக்கம்:ஆடும் தீபம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

125


அதைக் கட்டிக்கிடப் போறவனுக்கும் விருப்பம் இராது. இது தான் என்னோட முடிவான பதிலுங்க”

பலராமையா சற்று நேரம் பேசவில்லை.

“அல்லி வளமனையிலே வாழப்பிறந்த பொண்ணுன்னு நீங்க சொல்றீங்க. நானும் அதைஒத்துக்கிடுறேன். ஆனா அத்தோடே, அல்லி வெள்ளித் திரையிலே பிரமாதமாப் பிரகாசிக்கவும் பிறந்த பொண்ணுன்னுநான் நினைச்சேன். இருபதாயிர ரூபாய் சாமானியமான தொகை இல்லை. இளந்தம்பதிகள் சுகமாய் வாழ அது உதவும். எல்லாத்துக்கும். மேலே ஒண்ணு; அல்லி சம்பந்தமா தனிப் பொறுப்பு எடுத்துக்கிட்டு அதனுடைய பரிசுத்தத் தன்மைக்குத் துளி மாசு கூட ஏற்படாதபடிகண்காணிப்பேன். இது என் மகள் மேலே ஆணையா சத்தியம்!”

ஓடிச்சென்று, சம்மதம்’ என்று கூற அல்லி துடித்தாள் ஆனால் அப்படிச் செய்யாமல், சிறிது தூரத்தில் ஏதோ செய்து கொண்டிருந்த நாச்சியாரம்மாளை அழைத்தாள். அவள் மூலம் ராஜநாயகத்தை அழைப்பித்தாள்.

‘அம்மா, கூப்பிட்டாயா?...”

“ஆமாம்; அப்பா...!”

“அப்பா என்ற சொல் ராஜநாயகத்தை ஓர் உலுக்கு உலுக்கியது.

சரின்னு சொல்லுங்க.”

என்னம்மா சொல்றே? சரின்னு சொல்றதா?...’

“ஆமாம். சினிமாவிலே நடிக்க அல்லிக்குச் சம்மதம்னு சொல்லுங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/126&oldid=1322060" இலிருந்து மீள்விக்கப்பட்டது