பக்கம்:ஆடும் தீபம்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுதீபம்

127


அல்லிக்கு ஏனோ அழுகை குமுறிக்கொண்டு வந்தது. அதை மிகவும் பாடுபட்டு அடக்கிக்கொண்டு பேசினாள். “அப்பா, என்னை ஒண்ணுங் கேக்காதீங்க. என் மனசு சரியா இல்லே, கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுங்க. ‘இப்பவும்ஒண்ணும்முழுகிப்போயிடலே;நீஒரு வார்த்தை சொன்னா இப்பவே இந்த ஏற்பாட்டை நிறுத்திடுறேன்; உன்னோட சந்தோஷம் ஒண்ணுதான் எனக்கு முக்கியம்’னு கொஞ்ச நேரத்திற்கு முன்னே சொன்னீங்களே? அல்லிக்கு உடம்பு சுகமில்லே; அதனாலே கல்யாணம் இப்போதைக்கு நிறுத்தல்’னு அவங்களுக்கு எழுதிடுங்க அப்பா!’

ராஜநாயகம் பெருமுச்செறிந்தார். அவர் முகத்தில் ஈயாடவில்லை.

“அல்லி, நீ புத்திசாலி. தவறா எதுவும் நினைக்கமாட்டே, சொல்லமாட்டே, செய்யமாட்டே. அந்த ஒரே நம்பிக்கைலே நீ சொன்னபடி அவங்களுக்கு எழுதிடறேன். ஆன உன்னோட மனமாற்றத்துக்குள்ளே ஏதோ பயங்கரமான காரணம் புதைஞ்சிருக்கிறதாக எனக்குத் தோணுது. அது என்னன்னு தெரிஞ்சுக்காத வரையிலே எனக்குச் சோறுதண்ணிஇறங்காது;ராத்தூக்கம் வராது.இப்போ இல்லாவிட்டாலும், கூடிய சீக்கிரம் அதுஎன்னங்கறதை உன்னோட அப்பாவுக்கு சொல்லிடு அம்மா.’’ ஆகட்டும் அப்பா. கட்டாயம் சொல்லுவேன்’ சிரித்தபடி இவ்வாறு கூறிய மகளின் முகத்தை ஏறிட்டுப்பார்த்தார், தந்தை. அவள் திடீரென்று ஒரு பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்டவள் போல் மட்டுமின்றி, கல்வி கேள்வி, அறிவு அனுபவங்களிள் மிகத் தேர்ச்சியுடைய “நகரத்துப்பெண் போலவும் அவர் கண்ணுக்குத் தோன்றினாள்.