பக்கம்:ஆடும் தீபம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

133


அரைக்கண் பார்வையோடு அருணாசலத்தின் வருகையையே கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய அருமை மகள் ஒருநாள் கையையும் வாயையும் கட்டி விட்டுப் போனாளே? அப்போது கூட அவர் இவ்வளவு அதிகமான துயரத்தை அனுபவித்ததில்லை. நேற்று வந்தவள். அசல் கட்டுப்பட்டியாக-அநாகரீகத்தின் வாரிசாக வந்த அந்த அல்லி அவருடைய உள்ளத்தில் பாசத்தை இழையோடச் செய்ததோடு, உயிரைக் கூட அவளிடம் ஒப்படைக்கும் நிலைக்குக் கொண்டு வந்திருந்தாள். அருணாசலத்தின் தோற்றத்தைக் கண்டதும் அவருக்கு நிலைகொள்ளவில்லை. சக்தியனைத்தையும் ஒருங்கு திரட்டிக் கொண்டு எழுந்தார். ‘ என்னப்பா, என் அல்லியைக் கண்டாயா?’ என்று துயரத்துடன் கேட்டார். அவர் குரலில் ஆவல் படர்ந்திருந்தது. அவருடைய கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல், கதவைத் திறந்து கொண்டு காருக்குள் உட்கார்ந்தான் அருணாசலம். இவர்களிருவருக்கும் இங்கே வேலையில்லை போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு காரைக் கிளப்பினான் டிரைவர்.சிறிது தூரம் சென்றதும், “எங்கே ஸார்?’ என்று கேட்டான். இதைக் கேட்டதும் வெறி பிடித்தவனைப்போல, டிரைவரை நிமிர்ந்து பார்த்தான் அருணாசலம். எங்கே போவது? அந்தச் சொறி நாயை சுட்டுக் கொன்றால்தான் எனக்கு ஆறும், போலீஸ் ஸ்டேஷனுக்கு விடு’ என்று ஆத்திரத்துடன் கூச்சலிட்டான் அருணாசலத்தின்பேச்சு ராஜநாயகத்துக்குப் புரியவில்லை. சொறிநாய் என்று யாரைச் சொல்கிறான்? அல்லி காணாமற் போனதை இவன் தவறாக நினைத்துக்கொண்டு அவளையே அவ்வாறு சொல்லுகிறானே என்று நினைத்தார். நீ யாரை சொறிநாய் என்று சொல்கிறாய்,அருணாசலம்?’ என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/134&oldid=1328125" இலிருந்து மீள்விக்கப்பட்டது