பக்கம்:ஆடும் தீபம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

ஆடும்


நிலையில் அந்த அமரகவி நினைவுக்கு வந்தான். “அம்மா’ என் கனவை வீணடித்து விடாதே. உன்னேயே தான் என் கற்பனைக்காரிகையாக வைத்துக் கவிதை புனைந்தேன். இப்போது நீ மனம்தளர்ந்தாயோ, என் லட்சியமே பொடிப் பொடியாகி விடும். இதோ பார். வீரச் சின்னமான என் மீசையை அடுத்தாற் போல நீ செய்யப்போகும் வீரச் செயல்தான் மீசைக்கு மதிப்பை அளிக்கும் என்று கூறுகிறான் அக்கவிஞரேறு.

அடுத்தாற் போல, வயல் வெளியில் நெல் மணியிலிருந்து சருகைப் பிரிப்பதற்காக முறத்தை வீசிக்கொண்டிருந்த அந்தத் தமிழ்ப் பெண் தோன்றினாள். அதோ, தலை தெறிக்க ஓடுகிறது பார் ஒரு புலி. அதை நான்தான் துரத்தியடித்தேன். துணையாரும் இல்லாமல் நான்மட்டும் எப்படிப் புலியை எதிர்க்க முடிந்தது என்று ஆச்சரியப் படுகிறாயா? ஆயுதம் எதுவுமில்லாமல் நான். அந்தப் புலியை எப்படி ஒடச் செய்தேனென்று நகைக்கிறாயா? எல்லாம் என் மன் வலிமையால்தான்! மனத்தில் உறுதி வேண்டும். அதுபோதும், எதற்கும் பயப்படாதே. நீ ஒரு தமிழ்ப் பெண். இன்று என்னைக் காவியங்கள் போற்று கின்றன. எனக்குச் சிலை செய்து வைக்கப் போவதாகக் கூடப் பேச்சு அடிபடுகிறது. ஆகவே, என் பரம்பரையில் வந்த நீ என் பெயரைக் கெடுத்து விடாதே. பின்வாங்காதே, பயப்படாதே, உறுதிகொள். என்று அந்த வீரத் தமிழ் மகள் ஆவேசத்தோடுஅல்லிக்குத்தைரியமூட்டுவது போன்று அவளுக்குப் பிரமை ஏற்பட்டது.

படுக்கையிலிருந்தபடியே கண் திறந்து மிரள மிரள விழித்தது போலல்லாமல், இப்போது அல்லியின் மனம் ஒருநிலைக்கு வந்தது. வெகு நிதானமாகஜன்னலருகில் நடந்து சென்றாள்.வெளியே இருந்து வந்த காற்றின் வேகத்தில், பட்டாம் பூச்சி இறகைப் போல அடித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/139&oldid=1333009" இலிருந்து மீள்விக்கப்பட்டது