பக்கம்:ஆடும் தீபம்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுதீபம்

139


துக்கொண்ட திரைச் சீலையை நீக்கி வெளியே பார்த்தாள். சற்று தூரத்தில், பெரிய ரஸ்தாவில் எறும்புக் கூட்டம் போல கார்கள் ஊர்ந்து செல்வது தெரிந்தது. கடுகுக்குக் கையும் காலும் முளைத்தது போல மனிதர்கள் தெரிந்தார்கள். அவள் இருப்பது அநேகமாக ஆறாவது மாடியாக இருக்கலாம். சென்னை நகரை அவள் அவ்வளவாகச் சுற்றிப் பார்க்கவில்லையாகையால்தான் தற்போது இருப்பது சென்னையில்தான என்று கூட அவளுக்குச் சந்தேகமாகி விட்டது, சீமையாகத் தானிருக்கட்டுமே என்று எண்ணி மனசைத் தேற்றிக் கொண்டாள். பிறகு திரும்பி நடந்து கதவருகில் சென்றாள். அவள் எதிர் பார்த்ததைப்போல, கதவு வெளிப் பக்கமாகவே பூட்டப்பட்டிருந்தது. பாரதி’ தன் புதுமைப் பெண்ணுக்கு இப்படிப்பட்ட சோதனை யெல்லாம் வருமென்றா நினைத்திருப்பார்?’ என்று தனக்குள்ளாகவே எண்ணி வேதனைப் பட்டுக்கொண்டு, சோர்ந்துபோய் கட்டிலில் உட்கார்ந்ததாள்.

ராஜநாயகத்தின் வீட்டுக்கு முன்னால் ஒரு போலீஸ் வண்டிவந்து நின்ற்தைக் கண்டதும் இன்னாசிக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஏதோ ஆபத்து என்று முடிவு செய்து விட்டான். அதற்குமேல் அங்கு நின்று கொண்டிருக்க முடியவில்லை. தன் கடிதம் ஏதாவது கோளாறு செய்து விட்டதோ என்று இடையில் அவனுக்கு ஒரு சந்தேகம். என்னதான் என்று பார்த்து விடுவோமே என்று ராஜநாயகத்தின் வீட்டை நெருங்கினான்.போலீஸ்காரர்களைக் கண்டதும், ராஜநாயகம் ஓடோடி வந்தார். எல்லோருமாக வாசலிலேயே நின்று பேசிக்கொண்டிருந்தது இன்னாசிக்கு மிகவும் வசதியாகி விட்டது. நடந்தவைகளை, அங்கிருந்தோரின் பேச்சுக்களிலிருந்து புரிந்து கொள்ளவும் முடிந்தது. சினிமாக் கொட்டகையில் சிங்கப்பூர் சாத்தையாவைச் சந்தித்த விவரத்தையும் அதன் பிற்கு நடந்த சம்பவங்களையும் விவரித்து விட்டு, ஒரு