பக்கம்:ஆடும் தீபம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



140

ஆடும்


வேளை அவன் தான் அல்லியைக் கடத்திச் சென்றிருப்பானே என்ற சந்தேகத்தை எழுப்பினான் அருணாசலம். இதைக் கேட்டதும் இன்னாசிக்கு முகம் குப்பென்று சிவந்து விட்டது. அந்த நாயுடைய வேலைதான இது? என்று தனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

மணி ஆறரை மாடிப்படிகளில் யாரோ ஏறிவரும் ஓசை கேட்டது.

அல்லி மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். ஊராரின் தீ நாக்குப் பொசுக்கிய காயங்கள் கொடுத்த வேதனையால் மனசை திடப்படுத்திக் கொண்டு ஊரைவிட்டே வெளியேறினாள். ஊர் எல்லையைக் கடக்கும் தறுவாயில் சிங்கப்பூரானும் இன்னாசியும், அவளுடைய இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு வெவ்வேறு திசைகளில் இழுத்தபோதும், கடையிசில் அவர்கள் சண்டைச் சேவல்களைப்போல கத்தியைப்பிடித்துக் கொண்டு கொக்கரித்த போதும் எப்படி இதயத்தைத் திடப்படுத்திக் கொண்டாளோ, அதை விடப் பலமடங்கு தைரியமடைந்தாள். அவள் நினைவில் பாரதி தோன்றினார். புலியைவிரட்டிய தமிழச்சி தெரிந்தாள்.

வெளிப்பக்கமாக இருந்தபூட்டு திறக்கப்படும் சத்தம் கேட்டது.அல்லிக்கு விழிகளிரண்டும் அடித்துக் கொண்டன.அதுபயமல்ல; யாராயிருக்கும் என்று அறியத்துடிக்கும் மன ஆவலின் எதிரொலி.

சிங்கப்பூர்ச் சாத்தையன்,தன் தங்கப் பல் தெரியச்சிரித்தபடி நின்றிருந்தான். உன் நாட்டியம் ரொம்ப நன்றாக இருந்தது, அல்லி!’ என்று சிரித்தபடி சொன்னான்.

வெடுக்கென்று அவனை ஏறிட்டுப் நோக்கிய அல்லியின் விழிகளில் கனல் தெறித்தது இப்போது என் முன்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/141&oldid=1337565" இலிருந்து மீள்விக்கப்பட்டது