பக்கம்:ஆடும் தீபம்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



142

ஆடும்


கம்பி ஒன்று அவன் தலையில் வந்து விழுந்தது. ‘அம்மா” என்று அலறிக் கொண்டு கீழேசாய்ந்தான்.

‘வீல்” என்று கதறியபடி எழுந்து நின்றாள் அல்லி.அவளுடைய உடல் நடுங்கியது. எல்லாம் இமைக்கும்,நேரம் தான். அடுத்து அங்கேதோன்றிய இளைஞனைக் கண்டதும் இன்னும் மிரண்டு விட்டாள் அல்லி. இற்றுப்போன மரத்தைப்போல, கால்கள் நிலையில்லாமல் ஆடின. இதயம். உருகிக்கரைந்து விட்டதுபோல ஓர் உணர்வு; தலைசுழன்றது. கண்களிரண்டும் படபட வென்று துடித்து மேலே மேலேசெருகிக் கொண்டு சென்றன. மயங்கிய நிலையில் கீழே இறங்கிப்போன அல்லியின் கண்கள், கீழே விழுந்து கிடந்த சாத்தையனை நோக்கின. அவனது தலையிலிருந்து ரத்தம் குபுகுபு வென்று கொட்டிக் கொண்டிருந்தது. சாத்தையன் மயங்கிக் கிடந்தான். அல்லியையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தபடி, செய்வதறியாது திகைத்தபடி நின்று கொண்டிருந்தான் இன்னாசி