பக்கம்:ஆடும் தீபம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



146

ஆடும்


நுட்பமாக அவள் கண்கள் ஆராய்ந்து கொண்டிருந்தன. இன்னாசியின் கண்களிலிருந்துஅவள் தகவல்களை அறிந்து கொள்ளப் பார்த்தாள், அன்று தினம் அல்லி, நீ மொந்தைக்கள்ளு;குடிவெறி கொண்ட பயலுங்க ஊரிலே அதிகம்'என்று அம்மா சொல்லிச்செத்தபிறகு, தன் ஒவ்வொரு அசைவையும் பார்த்தஅத்தனை கண்களும்பேசிய பாஷைகளும் உணர்த்திய அர்த்தங்களும் அவளுக்கு எவ்வளவோ தகவல்களைக் கொடுத்திருக்கின்றன;

அருணாசலம், ராஜநாயகம் பார்வைகள்கூட அவளுக்கு எவ்வளவு விஷயங்களை அறிவித்திருக்கின்றன!

ஆனால் இன்னாசியின் கண்களிலிருந்து அவள் இப்போது எதுவும் தகவல் அறியமுடியவில்லை. காரணம், இன்னாசியின் கண்கள் இன்னும் அல்லியை மட்டும் முனைத்துப் பார்க்கும் நிலை எடுத்துக்கொள்ளாததுதான். அல்லியைப் பொருட்படுத்திதன் மனதுக்குள் நிலைக்கச்செய்து அதற்கு மேல் அவளோடு தான் அப்போது உறவு கொள்ளவேண்டிய முறை சம்பந்தமாக எவ்வித முடிவுக்கும் இன்னும் அவன் வரவில்லை என்றமாதிரி நடந்துகொண்டான்.விழிகளைச் சுழற்றி சாத்தையன், ரத்தம்பெருகிக்கிடந்த அந்த இடம், கம்பி, தன்கை இவற்றை மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.இவைகளை எல்லாம் ஒன்றுசேர்த்துப் பார்க்க முயன்று கொண்டிருந்த மாதிரி தோற்றம் காட்டினான்.

இன்னாசி எந்தநிமிஷமும்தன்னை நோக்கிஎட்டுவைப்பதை அல்லிஎதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று வண்டிப் பாதையில் கால்எடுத்து வைத்ததும் பின்னாலிருந்து ஒருகை பற்றி இழுத்ததும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க “எங்கே போறே? என்று இடிச்சிரிப்புடன் இன்னாசி நின்றதும் அவள்கண்முன்குதித்து வந்துநின்றன.அதற்குப்பின் இப்போதுதான்.அவனை மீண்டும் பார்க்கிறாள்.இப்போதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/147&oldid=1337594" இலிருந்து மீள்விக்கப்பட்டது