பக்கம்:ஆடும் தீபம்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுதீபம்

149


இந்த நினைப்பில் அவளுடைய கையில் பிடித்திருந்த கம்பிப்பிடி கூட சற்று தளர்ந்தது. மறுகணம் ‘சீ, அயோக்கியன்! வேஷம் போடுவான். என் கை ஓங்கி இருப்பது கண்டு!’ எனத் தனக்குள் சமாளித்துச் சொல்லிக் கொண்டதும் கம்பியைப் பற்றி இருந்த விரல்கள் இன்னும் பிடியை நெருக்கின. இன்னாசி பேச ஆரம்பித்தான். பேச்சு மெதுவாக வந்தது. அவன் இடதுகை இன்னும் அந்த வடுவைத் தடவிக் கொண்டிருந்தது. அதையும் கவனித்தாள் அல்லி.

‘அல்லி நீ இப்போ பார்க்கிறது வேறே இன்னாசி,’’ என்றான் இன்னாசி.

இந்தச் சாமர்த்தியப் பேச்சிலே நாள் கம்பியைக் கீழே போட்டுடுவேன்னுதானே நீ நினைக்கறே?’’ அல்லி ஒரு வெறியுடன் கூவினாள். ஊரை விட்டு எச்சிக்கலை நாய்களுக்காகப் பயந்து ஓடி வந்த பழைய அல்லி இல்லை நானும், தெரிஞ்சுக்க!”

இன்னாசி சில விநாடிகள் மெளனமாக இருந்தான். பிறகு தன் குரலைச் சிறிதும் உயர்த்தாமல், ஆனால் தன் மனதில் உள்ளதை அவளுக்கு உணர்த்த விரும்பும்.உறுதி யுடன் சொன்னான் , “அல்லி, அந்தக் கம்பியும் கையுமாகவே நீ அதோ திறந்து இருக்கிற கதவு வழியாக வெளியே போகலாம்.’

தன்னை அறியாமலே அல்லி பிடித்திருந்த இரும்புக்கம்பி பிடி தளர்ந்து போக, அல்லி சிரமப்பட்டுத் தான் அதை இறுக்கி இறுக்கிப் பிடித்துக் கொள்ளவேண்டிய தாயிற்று. இவை இன்னாசியின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தாமா? அவள் அதிர்ந்து போனாள். தனக்காகச் சாத்தையனும் இன்னாசியும் குத்திக்கொண்ட போதும், ராஜநாயகம் தன்னை மணந்து கொள்ளக்