பக்கம்:ஆடும் தீபம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

151


.

நேராக ஓங்கியவாறே நகர்ந்து போக நினைத்தாள். “எப்படியும் தான் அங்கிருந்து தப்பினால் போதும். இன்னாசியைப் பற்றித்தனக்கு என்ன கவலை? மனதிற்குள் கேட்டுக்கொண்டே நகரப் போனாள் அல்லி.

அப்போது இன்னாசியின் உதடுகள் அசைவதைக்

கண்டாள் அல்லி,

‘அல்லி இன்னாசி இனிமேல் உனக்கும் அருணா சலத்துக்கும் குறுக்கே வரமாட்டான். இந்தப் பிணமும் இனி ஏந்திருக்காது ‘ - -

அல்லி கூவி விட்டாள். ஐயோ! கீழே கிடந்த சாத்தையனைப் பார்த்தாள். அவன் விறைத்துக் கிடந்தான் அலறிப் பின் பாய்ந்தாள் அல்லி. கையில் இருந்த கம்பி நழுவிக் கீழே விழுந்தது. அடுத்த வினாடி தன் தற்காப்பு ஆயுதம் இல்லாமல் தான் நிற்பதை உணர்ந்த அல்லி இன்னாசியின் முகத்தை மருட்சியுடன் பார்த்தாள். இன்னாசி அசையாமல் நின்றான் . அவன் நின்ற நிலையைக் கண்டு ஒரு திடீர் நம்பிக்கை அல்லிக்கு ஏற்பட்டது. அவளும் அந்தக் கம்பியை மீண்டும் கையில் எடுக்க முயலவில்லை.

பிணமாகக் கிடந்த சாத்தையனை மறுபடியும் பார்த்து விட்டு அவள் பீதிப்படுவதை குறிப்பறிந்து கொண்டஇன்னாசி, அங்கிருந்த ஒருதுணியை எடுத்துப்பிணத்தை மூடினான்

அல்லிக்கு நம்பிக்கை பிறந்தது. இன்னாசியைச் சாந்தமாகப் பார்த்தாள். இன்னாசி'நீ எப்படி மாறிவிட்டாய்? என்னால் நம்பமுடியவில்லை’ என்றாள். ‘. . . . . . . .

ஆமாம்; ஊருக்குப் பெரியவரான பட்டாமணியம் பாளையப்பத்தேவர் மகன் இன்னாசி இப்படிக்கொலைசெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/152&oldid=1341251" இலிருந்து மீள்விக்கப்பட்டது