உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



152

ஆடும்


யப் போகிறான் என்பதாக, யார்தான் நம்பி இருப்பார்கள்? இதோ பாரு அல்லி, இப்போ ரொம்பப் பேசுவதற்கு நேரமில்லை. நீ இதை விட்டுப் போகலாம்.”

“நீ?” என்று அல்லி கேட்க வாயெடுத்தாள். ஆனால், மனதில் அந்தக் கவலையே ஏற்படவில்லை. இன்று, இன்னாசி இப்படி நடந்து கொண்டு விட்டதற்காக, அத்தனை வெறுப்பும் மறைந்து விடுமா? அவனிடம், அவளுக்கு ஒரு அபிமானம் ஏற்பட்டு விடுமா?

“அல்லி, ஒரு தடவை உனக்காகக் கொலை வரைக்கும் போகத் தயாராக இருந்தேன். வெறியிலே செய்தது!” என்றான் இன்னாசி. வயிற்று வடுவைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். “இன்னொரு தடவை அதுக்குப் போக விரும்பவில்லை. உன்னை மறந்து விட்டுத்தான் இருந்தேன்.”

“இருந்தவனாகத் தெரியவில்லையே” என்று மறுத்தாள் அல்லி. “இல்லா விட்டால், இப்போ ம்றுபடியும் என்னைத் தேடிக் கொண்டு, இங்கே வந்திருக்க மாட்டியே? நீங்க இரண்டு பேரும் திரும்ப…”

அல்லியை முடிக்க விடவில்லை இன்னாசி. “அல்லி!” அவன் குரல் சற்றுக் கடுமையாகவே வந்தது. “சாத்தையனைக் கொன்று விட்டு, உன்னைத் துன்புறுத்தவே, நான் வந்திருப்பதாகச் சொல்ல வருகிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனால், சொல்கிறேன். ஐந்தாறு மாதங்களாக ஆஸ்பத்திரியிலிருந்து விட்டு, செத்துப் பிழைத்தவனாக வெளியே வந்ததும், சினிமாவில் காலில் சதங்கை கட்டிக் கொண்டு, நீ ஆடினதைப் பார்த்து விட்டு, உன்னைக் காணும் ஆவலுடன், நான் இங்கு வந்ததும் உண்மைதான். நீ இருக்கிற இடம் அறிந்து, அருணாசலத்துக்கும், உனக்கும் திருமணம் நடக்கப் போவதை அறிந்து, உன்னை முரட்டுத் தனமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/153&oldid=1688613" இலிருந்து மீள்விக்கப்பட்டது