பக்கம்:ஆடும் தீபம்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

153


செல்ல முடியாது என்பதைப் புரிந்துகொண்டு உன் மனம் பேதலிக்கச் செய்ய சுகுணா என்ற பெயரால் கடிதம் எழுதியதும் உண்மை’

அடப்பாவி!’ என்று கத்திவிட்டாள் அல்லி. ‘ஒரு மோசடிக் கடிதத்தால் என்ன விபரீதத்தை விளைவித்து விட்டாய்? அந்த கடிதத்தைப் படித்து விட்டு ராஜநாயகத்திடம் நடந்து கொண்டதையும் நினைத்துக் கொண்டாள். “ஐயோ. அந்தக் கடிதம்! பல்லைக் கடித்துக் கொண்டாள். அதை அப்படியே போட்டுவிட்டிருந்ததும் ஞாபகம் வந்தது. அருணாசலம் கையிலோ ராஜநாயகம் கண்ணிலோ பட்டிருந்தால்? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தன்னைத்தேடுகிறார்களா? என்று அவள்மனம் குழம்பியது. “சண்டாளா, உன்காரியம் நிறைவேற இந்த அளவுக்கா போய்விட்டாய்? உன்னை என்ன செய்தால் என்ன?...’

அல்லி!”

இடை மறித்தான் இன்னாசி, ‘ என்னை என்ன செய்ய வேண்டும் என்பது உன் வசத்தில் இல்லை. விஷயம் அதற்கெல்லாம் மீறிப் போய்விட்டது!”

சொல்லிவிட்டு கீழே கிடந்த சாத்தையனின் பிணத்தைப் பார்த்தான். ஒருதடவை உனக்காக கொலை வரைக்கும் போனவன் மறுதடவை அதற்குப் போய் விடக்கூடாது என்ற முடிவுடன் தான் சூழ்ச்சியால் உன் மனசை அருணாசலத்தினிடமிருந்து திருப்பப் பார்த்தேன்!”

கயவன்!” என்று முணுமுணுத்தாள் அல்லி. உன்பக்கம் என் மனசு திரும்பிவிடுமென்று நீகனவுகண்டாயோ?.:

ஏளனச் சிரிப்புச் சிரித்தாள் அல்லி,