பக்கம்:ஆடும் தீபம்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"திரும்பாது என்பதும் எனக்குத் தெரியும் ஆனால், நீ அருணாசலத்துக்குக் கிடைக்கக் கூடாது. அது போதும்

எனக்கு!...’

அல்லி இன்னாசியைப் உறுத்துப் பார்த்தாள்.

‘அருணாசலம் உனக்கு அப்படி என்னசெய்து விட்டான், இந்தப் பழி வாங்குவதற்கு என்று கேட்க வருகிறாயா அல்லி? அந்தத் தகவல் உனக்குத்தெரிய வேண்டாம். அருணாசலத்தை எப்படித் தெரியும் என்று நீ வேண்டுமானால் பிற்பாடு அருணாசலத்தையே கேட்டுத் தெரிந்து கொள்!...”*

அல்லி திகைத்தாள்.

அருணாசலமும் சாத்தையனும் நண்பர்கள்,அருணாசலமும் இன்னாசியும் இப்போது ஒருவருக்கொருவர் அறிமுகமான வர்கள். இன்னாசியும் சாத்தையனும் ஒரு ஊர்க்காரர்கள். அது அவளுக்குத் தெரியும். இதென்ன நச்சுவட்டம்: இதற்குள்அகப்பட்டுக்கொண்டுநான்படுகிற அவஸ்தை!’ எதுவும் புரியாமல் தவித்தாள். தாள் என்ன, ‘பதினைந்தாம்புலி, ஆடுகளில் ஒன்றா,இவர்கள் விருப்பப்படி இரையாவதற்கு? அருணாசலத்தின் முன் வாழ்க்கை அவளுக்கு விவரம் தெரியாத, விளங்காத, சிக்கலான ஒரு புதிர் ஏடாகப்பட்டது. அவள் சிந்தனையோட்டத்தை தடுக்கிற வகையில் இன்னாசி தொடர்ந்தான்.

“அல்லி, பேச்சை வளர்த்துக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. சுருக்க முடித்துவிடுகிறேன். நீ இந்த இடத்திலிருந்து போய்விட வேண்டும்.நீ சுகமாக இருக்க வேண்டுமானால்,இந்த இடத்தை நீ ஆராய விரும்பாதே உனக்கு இந்த இடம் தெளிவு படாது.உன் கற்பனைக்கும் போற்பட்ட இடம் இது. சாத்தையன், நான். அ...'