பக்கம்:ஆடும் தீபம்.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

155


உதட்டைப் பல்லால் கடித்துக் கொண்டு மீதியை உச்சரிக்காமல் அடக்கிக்கொண்டு மேலே தொடர்ந்தான். ஆனால் அந்த ‘அ’ சப்தத்தை அல்லி கவனிக்காமல் இல்லை.

“ அல்லி, எங்களில் அருணாசலம் அதிர்ஷ்டக்காரன்; நீ அவனுக்குத்தான். உங்கள் உறவுக்குத் தடையாக இருந்த... ‘ என்று சொல்லி நிறுத்தி சாத்தையனின் பிணத்தைப் ‘பார்த்தான். பிறகு ஒரு பெருமூச்சுடன் ‘நானும் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடமாட்டேன். சரி, என் உதவி உனக்கு வேண்டுமானால், நீ என்னை நம்புவதானால், நானே உன்னைக் கொண்டுபோய் விடுகிறேன்!...”* -

அல்லியின் பார்வையில்-முகச் சுளிப்பில் அவ நம்பிக்கை!

“ அல்லி உன் அவநம்பிக்கை எனக்குப் புரிகிறது. நான் உனக்குப் பழைய இன்னாசியாகத்தான் படுகிறேன், உண்மை. என்னிடம் வந்த மாறுதலை நீ அறிந்துகொள் வதற்கான சூழ்நிலையில் அல்லது நான் மேற்கொண்டு உனக்கு நிரூபிக்கத்தக்க நிலையில் இப்பொழுது நான் இல்லைதான்.எனக்குள் மாறுதல்ஏற்பட்டகாரணத்தையும் சமயத்தையும் மட்டும் உனக்குச் சொல்லிவிட்டால் எனக்குப் போதும். பொய்க் கடிதத்தை எழுதிவிட்டு அதன் விளைவைத் தெரிந்து கொள்ள உன் வீட்டு வாசலில் மறைந்து நின்றபோது நீ காணாமற் போய்விட்டதுபற்றிய பரபரப்பைக் கண்டேன். போலீஸ்சுடன் ராஜநாயகமும் அருணாசலமும் பேசிக்கொண்டிருந்ததில் சாத்தையன் பெயர் அடிபட்டது. பாம்பின் கால் பாம்பறியும், அதற்கு மேல் அவனும் நீயும் இந்த இடத்தில் இருப்பதைக் கண்டுபிடிக்க எனக்கு அதிக நேரம் ஆகவில்லை.”

சீ, கொலைபாதகக் கும்பல்!” என்று முணுமுணுத்தாள்