பக்கம்:ஆடும் தீபம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



156

ஆடும்


அல்லி. சாத்தையன் நமக்கு முந்திக்கொண்டுவிட்டான் என்று ஓடிவந்தாய்’ ‘’ அல்லி, நான் இப்போது கொலைபாதகன்தான். சாத்தையன் பொறிதட்டி விழச் செய்யும் அளவுக்குத் தான் பலத்தை உபயோகிக்க விரும்பினேன். வயிற்றில் முன்பு பாய்ந்த வேல் கம்புக்குத்து ஞாபகத்துக்கு வந்தது. என் நிதானத்தை இழந்துவிட்ட நிலையில் பலத்து விழுந்திருக் கிறது.சாத்தையன் முந்திக்கொண்டான் என்றஆத்திரத் தில் அல்ல-நீ நினைப்பது போல அல்லி!-அருணாசலம் கொஞ்சம் முன்னாடி உன்னால் திருந்திவிட்டான். இப்போது தான் நான் தெளிந்தேன்!...”*

அல்லிக்கு பளிச்சென்று ராஜநாயகம் வார்த்தைகள் ஞாபகம் வந்தன. நீ சாமான்யப் பெண் இல்லை.என் னைத் திருத்தினே. அருணாசலம் பயலே மயக்கித் திருத்தினே. இப்படி எத்தனை பேரை உன் அழகாலே ஆட்டிவச்சு மதியாலே திருத்த நீ பிறந்திருக்கியோ? இதென்ன. தனக்கு அத்தகைய சக்தியா இருக்கிறது?-முதலில் ஆட்டிவைக்கவும் பிறகு திருத்தவும். கீழே கிடந்த சாத்தையனின் பிணத்தைப் பார்த்தபின் இன்னாசியைப் பார்த்தாள். இன்னாசியின் முகத்தில் கண்ட அமைதி அந்த பிணத்தின் அமைதியின் பிரதிபலிப்பா? இல்லை. இது வரையுள்ள நாட்களின் நினைவே மாறி. மீண்டும் ஒரு பிள்ளையார் சுழி போட்டுத்தான் ஆரம்பிப்பதற்காக ஒரு புனர் வாழ்வின் ஆரம்பத்திற்கான அறிகுறியா? அவளால் நிதானிக்க முடியவில்லை. இன்னாசி ஒரு மிருகமாக இப்போது இல்லை என்பதை மட்டும் அவள் கண்டறிந்தாள் .

அல்லி. என்று உறுதியான குரலில் கூப்பிட்டான் இன்னாசி. ‘நீ புறப்பட்டுப்போய் அதே நேரே படி இறங்கி இடது பக்கம் திரும்பிப் போனாயானால், வாசலுக்கு நேரான வழி தெரியும், போய்விடு. போய்விடு: அவன் குரல் விரட்டலாக வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/157&oldid=1354813" இலிருந்து மீள்விக்கப்பட்டது