பக்கம்:ஆடும் தீபம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

157



நீ என்று இரண்டுஎட்டுகள் கதவை நோக்கி வைத்துக் கொண்டே கேட்டாள் அல்லி. அவள் குரலில் ஒருகனிவு தொனித்தது. முதன் முறையாக இப்போதுதான் அவனை ஒரு மனிதனாகக்கருதி அதற்குத்தக்கவாறு பேச வாயெடுத்தாள் அல்லி.

இன்னாசி சிரித்தான்: ‘கொலை செய்யும் உத்தேசம் இல்லாமலே கொலை பாதகனாக ஆகிவிட்டேன்!” அந்தப் பிணத்தின் பக்கம்திரும்பினான். ‘இந்தப்பிணத்துக்கு ஒரு வழி செய்தாக வேண்டும்!”

  • எந்தப்பிணத்துக்கடா வழிசெய்யப் போகிறாய்?’’.

அவனுக்கு முன்னால், குரல் அதிகாரத்துடன் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பினான் இன்னாசி. அதே சமயம், தன் கைகள் பிடித்துக் கொள்ளப்படுவதை உணர்ந்தான் இன்னாசி. எதிரே நின்றவருக்குப் பின்னாலிருந்து முன் வந்த ஆளைக்கண்டதும் திடுக்கிட்டு விட்டான்.

இன்னாசி, நீயா?’ என்று கூவிவிட்டான் அருணாசலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/158&oldid=1389260" இலிருந்து மீள்விக்கப்பட்டது