பக்கம்:ஆடும் தீபம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

ஆடும்



எந்தப் பிணத்துக்கடா வழி செய்யப் போகிறாய்?’ ‘

கேள்வியில் தோய்ந்த உறுமல், பிணத்தைக் கூட அசைத்ததோ, என்னவோ? நிமிர்ந்து பார்த்த அல்லி யால் தன் கண்களை நம்பவே முடியவில்லை.

ராஜநாயகம் நின்று கொண்டிருந்தார். நல்ல வேளை போலீசு இல்லே’ என்ற நிம்மதி இன்னாசி முகத்தில் ஒருகணம் பிரதிபலித்தாலும், அருணாசலம் கேட்ட கேள்வி அவனைத் தூக்கி வாரிப் போட்டது.

தன்னை சமாளித்துக்கொண்டு பேச அவனுக்கு ஒரு நிமிடமாயிற்று. அந்த ஒரு நிமிஷத்தில் அறையே ஒரு அந்தர பலத்தில் தொங்குவதாகப் பிரமை.

“ஆமாம், அருணாசலம். நானேதான்!............ இன்னாசியேதான்! நீயே என்னை போலிஸில் கொண்டு போய் காட்டிக்கொடேன்! ...’

இன்னாசிக்குக் கொலை புதியதல்ல என்பதை அவன் குரலே உணர்த்தியது.

‘அவன் எதற்கு? நான் வருகிறேன். வா, ராஜநாயகம் தன் முன் கிடந்த பிணத்தைக் கண்டு ஒருகணம் பதைத்தாலும் பழைய தைரியம் மீண்டு விட்டது. ஆனால் இன்னும் பிணத்தின் சொந்தக்காரர் யார் என்று தான் தெரியவில்லை.

‘நீங்களா? தேவையில்லை. எங்கள் மூவரில் ஒருவன் நான் தீர்த்துவிட்டேன். அவன் என்னையும் தீர்க்கப் போகிறான்; எஞ்சி நிற்பது யார்? அவன்! அவன் மட்டும ஏன் இந்த உலகில் நல்லவர்களைப்போல் நடித்து வாழ வேண்டும்?’

அல்லியும் ராஜநாயகமும் வாய் அடைத்து நின்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/161&oldid=1389271" இலிருந்து மீள்விக்கப்பட்டது