பக்கம்:ஆடும் தீபம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

ஆடும்



மறுநாளே இன்னாசியும் அருணாசலமும் பிடிபட்டார்கள் ஒருவன் மீது கொலைக் குற்றம் ஒன்று. இன்னொருவன் மீது இரண்டு. போட்ட பழைய கணக்கை இப்போது எதிர்பாராத விதத்தில் அருணாசலம் ஒப்பிக்கும்படி யாயிற்று. ராஜநாயகம் வீட்டில் ஆடல் இல்லை; பாடல் இல்லை. குட்டையருகே வானத்தைப் பார்த்துப் பாடும் தவளை போன்ற நாச்சியாரம்மாவின் பொக்கை வாய் மெளனமாகப் புகையிலையை மென்று கொண்டிருந்தது. பட முதலாளி பலராமனும் இன்னும் இரண்டு மூன்று. நாட்டியச் சங்கக் காரியதரிசிகளும் அல்லி இல்லை என்ற செய்தி கேட்டுத் திரும்பிப் போனார்கள்.

ராஜநாயகம் மற்றவர்களை ஆட வைப்பார். ஆனால் இப்போது அவரே ஆடலானர். அவர் ஆட்டம் அவருக்கே பயமாக இருந்தது.

ஆனால் பயத்தையும் மீறிய நிலையில் அல்லி இரண்டுநாட்களாக படுக்கையோடுபடுக்கையாக ஒட்டித்துவண்டு கிடந்தாள். சமையற்காரம்மாள் கெஞ்சியும் கூத்தாடியும் அவளைச் சாப்பிடச் செய்யும்படியாக நேர்ந்தது. மூன்றாம் நாள். இரண்டு இரவுகளாக அவள் கண்முன் சாத்தையாவின் பிணமும், இன்னாசிகையில் பிடித்த இரும்புக் கம்பியும், திடீரெனப் பாய்ந்து வெளியேறிய அருணாசலமும் வட்டமிட்டார்கள். மூன்றாம் நாள் காலையில் மயக்கம் தெளிந்தது. அவன் யாரை விட்டு ஓடிப்பட்டணம் செல்ல வேண்டும் என்று ஓடி வந்தாளோ, அவர்கள் அவர்களுக்கென வகுக்கப் பட்ட பாதையில் சென்று விட்டார்கள். அந்தப்பாதையை அவள் அறியாமல் அவளேவகுத்துவிட்டாள்.அவளுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/163&oldid=1389274" இலிருந்து மீள்விக்கப்பட்டது