உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

ஆடும்


அந்தக் குப்பையில், சமூக நண்டுகளின்—புழுக்களின் பேச்சு மறைந்துதானே ஆக வேண்டும்?

பட்டணம் நெருப்பில் வீழ்ந்த அவள் வெளியேறுகையில், புடமிட்ட தங்கமாகத்தான் மாறினாள்.

மாங்குடி அவளை அழைத்தது. கலயமும், கஞ்சியுமாக ஒரு நாள் தாயார் நின்ற காட்சி, கண் முன் நிழலாடியது. ‘என் பிணத்தைக் கண்டு, அன்று சிரித்தாயே அல்லி, இன்று: உன்னைக் கண்டு சமூகம் சிரிக்கும்படி விடலாமா?’ என்று அவள் நினைவில் அடங்காத தகப்பனார் கேட்பது போலத் தோன்றியது. ‘அல்லி ஓடி விட்டாள்’ என்று மாங்குடி ஓலமிட்டால், அந்த ஓலம் அவளுடைய தாய், தகப்பன் இருவருடைய ஆவிகளுக்குக் கூடக் கேட்குமே?

அவள் திரும்ப வேண்டும்; மாங்குடிதான் இனி மேல், அவளுக்குத் தாயும், தந்தையும்—நிலம்தான் குழந்தை. வீடுதான் கணவன்.

சமையற்காரியம்மாள் அழைக்க வராமலே, அல்லி போய்ச் சாப்பிட்டாள். இது ராஜநாயகத்துக்குக் கூட வியப்பைத் தந்தது.

“அல்லி…!”

அவருடைய அன்புக் குரலில் ஒரு நெகிழ்ச்சி.

“இதோ…!”

“நான் ஒன்று தீர்மானித்திருக்கிறேன்!”

“என்ன?”

“நாம் இரண்டு பேருமாக சென்னையை விட்டு, நாலு இடங்களுக்குப் பிரயாணம் செய்யலாம் என்று…!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/165&oldid=1688788" இலிருந்து மீள்விக்கப்பட்டது