பக்கம்:ஆடும் தீபம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

165



‘நானும் தீர்மானித்து விட்டேன், பட்டணத்தை விட்டு ஓடி விடலாம் என்று

எங்கே..

“எங்கிருந்து வந்தேனோ அங்கே! பிறந்த மண் என்னை 'வா’ என்கிறது!’

என்னை விட்டுப் போகப்போகிறாயா? “ஆமாம்...வேறு வழியில்லை...நான் அபலையாக இங்கு வந்தேன். நீங்கள் ஆதரித்தீர்கள். இப்போது உங்கள் ஆசியுடன் நான் திரும்புகிறேன்; வீடும் வாசலும் இருக்கிறது. அன்றாடத் தேவைக்குக் கஷ்டமில்லை.’

  • நீ சினிமாவிலும் நாட்டியத்திலும் சம்பாதித்த பணம்...!”
  • அது உங்களுக்கு!... எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள். இப்போது வேண்டியது ரெயில் சிலவுக்கு ஏழு ரூபாய்...!”

அவளது குரலில் வைரம் ஏறியிருந்தது. * நான் வருகிறேன்

வேண்டாம். இனி என் வழி தனி வழி. உங்களுடைய உதவிக்கு என்னால் கைம்மாறு செய்ய முடியாதது பற்றித்தான் எனக்கு வருத்தம். இன்று சாயங்காலம் தான் ரெயில் ஏறுகிறேன். நீங்கள் உங்கள் பெண்ணை வழி அனுப்புவதுபோல அனுப்பவேண்டும்.’ “உன் கதை. அப்பப்பா!’ ராஜநாயகம் பெருமூச்செறிந்தார். “என் கதையின் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/166&oldid=1389281" இலிருந்து மீள்விக்கப்பட்டது