பக்கம்:ஆடும் தீபம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

17


என்று ஒரு பிடிமானம் இருந்தது. இப்பொழுது தூரும் இல்லை; கிளையும் இல்லை; கொம்பும் இல்லை; தரையும் இல்லை.

இல்லை, இல்லை, இல்லை... ... வெண்டியப்ப அண்ணன் தொலிக்கலப்பையைக் கழுவிக் கொண்டு போய்விட்டார்.செம்பிரான் கல்லில் சவுக்காரம் போட உட்கார்ந்துகொண்டிருந்த அல்லி தண்ணீரில் விழுந்து இரண்டு முழுக்குப்போட்டாள். வீட்டிற்கு வந்ததும் ஈரச்சேலையை மாற்றவேண்டும் என்றஉணர்வு கூட இல்லை. ஆல்வீட்டு வாசற்படியில் தலையை வைத்துக்கொண்டு சாய்ந்தவள்தான், “என்ன அல்லி அக்கா பேசமாட்டியா?”

இரண்டாவது முறையாகச் செந்தாமரை கேள்வி போட்டதும்தான் அல்லியின் உணர்வுவாசலுக்குத் திரும்பியது. தடதடவென்று உள்ளே ஓடிவந்து, சாய்ந்து கிடக்கிற உடலைப் புரட்டிப்புண்ணாக்கிவிட வேண்டிய செந்தாமரை இப்பொழுது லெளகிகமாக வெளியே நின்று பேசுகிறாள். எச்சரிக்கப்பட்டிருப்பாள் போலிருக்கிறது. திரண்டு வந்த தனிமை, பிரிவுவிலக்கம் ஒரு நீண்ட பெருமூச்சாக வெளியேவந்தது: “ஊம்...’ * திருக்கார்த்திகை ஆச்சே!’

‘எனக்குத் தெரியும்.”

பின்னே..ஏன் விளக்கு ஏத்தி வைக்கல்லே?’’ “நீ கேட்கவேண்டாம்.’’ ‘பின்னே யார் கேட்கணும்னு நினைக்கிறே?”

  • யாரோ!’

“இன்னாசியா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/18&oldid=1390333" இலிருந்து மீள்விக்கப்பட்டது