பக்கம்:ஆடும் தீபம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

19


  • மகாராசா போயிட்டீங்களே!’’ என்று கதறினாள். இத்தனைபேர் சேர்ந்து ஒப்பாரி வைக்கும்போது அப்பாவால் எப்படி நிம்மதியாகத் தூங்க முடிகிறது? என்று ஆச்சரியப் பட்டாள் அல்லி. பிணத்தைக் குளிப்பாட்டும்போது அவளுக்கு ஒரே சந்தோஷம். வேண்டும் அப்பாவுக்கு. நான் வேண்டாமென்றாலும் பிடித்து உட்காரவைத்துக் குளிப்பாட்டி விடுவாரல்லவா? இப்பொழுது எத்தனைபேர் அவரை உட்காரக்கூட விடாமல் கீழே சாய்த்துப் பிடித்துக்கொண்டு குடம் குடமாகத் தண்ணீர்கொட்டுகிறார்கள்? கொட்டட்டும்!’ பிணத்தைப் பாடையில் வைத்துத் துாக்கும்போது தப்பு கிடுகட்டி தம்பூரா, உறுமி, கொம்பு முதலிய வாத்தியங்கள் முழங்கின. தன் வீட்டு வாசலில் அத்தனை வாத்தியங்களும் முழங்குவதில் அவளுக்கு ஒரு பெருமை. இந்தச் சாவில் அவளுக்கு முழுக்க முழுக்க ஆனந்தம்,

இரண்டாவது சாவை அவள் மகிழ்ச்சியுடன் தாங்கிக் கொள்ள முடியவில்லை. காரணம்,சாவின் பயங்கரத்தை உணரக்கூடிய வயசுப் பெண்ணாக அவள் இருந்தது தான். செத்தவள் தாய். இருந்த ஒரு கடைசிப்பிடிப்பும் கைவிட்டுப் போன அவலத்தில் முட்டிக்கொண்டு அழுதாள்.எல்லோரும் அவள் துக்கத்தை அதிகப்படுத்தினர். * நீ இனி எப்படியம்மா இந்தப்பொல்லாத பருவத்தை வைத்துக்கொண்டு தனியாக வாழ்ந்து குப்பைகொட்டப் போகிறாய்?’ என்று மூக்கைச் சிந்தினர்.

அப்பொழுது நம்பிக்கை கொடுத்தவர் வெண்டியப்ப அண்ணன் தான். விதியை மறிக்க யாராலே முடியும்? அவுங்க அவுங்க தனிததனியா வாராங்க, கொஞ்ச காலத்துக்கு ஒருகூட்டத்தைச் சேர்த்து விட்டுட்டுத்தனித் தனியாப்போறாங்க, வந்து போய்க்கிட்டிருக்கிற விருந்தாளிகளை நிறுத்தி வைக்கமுடியுமா அல்லி? கண்ணீரைத் துடைச்சுக்க, என்னை உன் அப்பனா நினைச்சுக்க. செந்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/20&oldid=1408152" இலிருந்து மீள்விக்கப்பட்டது