பக்கம்:ஆடும் தீபம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20

ஆடும்


மரையை உன் தங்கச்சியா எப்போதுமே பக்கத்திலே வச்சுக்க, எத்தனை கவலை இருந்தாலும், உனக்குச் சோத்துக் கவலை இல்லை.வேண்டிய மண்ணு இருக்கு; உழைக்கிறதுக்கு நானிருக்கேன் .’

அல்லிக்குப் புதுப்பிடிமானத்தில் வாழ்க்கையை நிறுத்துவதற்குக் கொஞ்ச காலம் கஷ்டமாகத்தான் இருந்தது. அம்மாவும் பெண்ணுமாக உலவிய அந்த வீட்டில் பெண்ணாக இருக்க நேர்ந்தபோது, பழைய நினைவுகள் மனதில் வாள் தீட்டும்.

அல்லிக்குத் துடுக்கு அதிகம். கள்ளமில்லாமல் சிரித்து நாலு பேரை வம்புக்கு இழுப்பதில் மாவடு தொட்டுக் கொண்டு பழஞ்சாதத்தைச் சாப்பிடுவது போன்ற ஆனந்தம்.

அல்லி எட்டுமுழப் பந்தல்குடிச் சிற்றாடையை உடுத்தும் பருவத்திற்கு வந்தபோது, அம்மாக்காரி ரொம்பக்கண்டிப்பாக இருந்தாள். அங்கே நிற்காதே, இங்கே போகாதே! என்றெல்லாம் கடுகடுத்தாள். இன்னும் நீ சின்னப்பெண் இல்லை!” என்றாள்.

பருவம் அல்லியைப் புரிந்து கொண்டிருந்தது. அல்லி தான்பருவத்தைப் புரிந்துகொள்ளவில்லை. பிறகு, நான் என்ன பெரியவளா?’’

“பெரியவளா இருந்தாலும் பாதகமில்லையே? நீ மொந்தைக் கள்ளு!’

இப்போத்தான் கள்ளே இல்லையே அம்மா? இந்த மது விலக்குக் காலத்திலே இப்படி எல்லாம் நீ சொல்லிக்கிட்டிருந்தியானா நிச்சயம் உன்னைப் போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போயிடும்’

“வேடிக்கை இல்லே'அல்லி,உன் பருவம்கள்ளாக நிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/21&oldid=1408153" இலிருந்து மீள்விக்கப்பட்டது