பக்கம்:ஆடும் தீபம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ஆடும்


குளிக்கப் போனால் நாலுபேர், வாசலுக்கு வந்தால் முறைத்துப் பார்க்க நாலுபேர் என்றாகிவிட்டது. எல்லா இளவட்டங்களும் கிறங்கிப் பார்த்தாலும் நெருங்கிவரும் தைரியத்தை இழந்து விட்டிருந்தனர். பட்டாமணியம் பாளையப்பதேவர் ஊருக்குப் பெரியவர். அவர் மகன் இன்னாசி எது வேண்டுமானாலும் செய்யலாம். கேட்க நாதி ஏது? நியாயம் ஏது? அவன் மட்டும் அல்லியை நெருங்கிப் பல்லிளித்தான்.இளித்த பல் தெறித்து விழும்படியாக அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை கொடுத்து வைத்தாள் அல்லி. வாங்கிய முதல் அதிகம். பிறகு அருகே நெருங்காமல் தூரத்தில் இருந்து சீட்டி அடித்துத் தன் உள்ளக் கிடக்கையை ஆற்றிக் கொண்டான் இன்னாசி.

கைக்குக் கிடைக்காததைக் கொட்டிக் கவிழ்ப்பது சாம்ராஜ்ய தந்திரம் அல்லவா? இன்னாசி இத்தகையதொரு ராஜதந்திரப் பிரச்சாரத்தில் இறங்கினான். அல்லிக்கும் எனக்கும் சிநேகம். அந்த மேல் சவுக்காரத்தை நான் தான் அவளுக்கு வாங்கிக்கொடுத்தேன். அவ போட்டிருக்காளே சீட்டி ரவுக்கை,அது ஆயிங்குடி ராவுத்தர் கடையிலே நான் எடுத்து வந்தது!’ என்று பிடிக்கும் இடங்களாகப் பார்த்துப் பற்ற வைத்தான் . -

கிராமங்களில் புரளிகளுக்கு ரொம்ப மவுசு உண்டு. நகரங்களில் ஓட்டுக்குப் பத்து ரூபாய் கொடுத்தும் தேர்தலில் நாமத்தைப் போட்டுக்கொண்ட சட்டசபை விரும்பிகள் கிராமங்கள் சூழ்ந்த பிரதேசத்தில் புரளியைத் தேர்தல் சின்னமாகக்கொண்டு நின்று பார்க்கட்டும். நிச்சயம் வெற்றிபெறுவார்கள்!

இன்னாசி கிளப்பிவிட்ட புரளி பலன் பெற்றது. சம்பாதிக்கிறாள் என்று குளக்கரை பேசியது; சாவடி பேசியது; வயல் வெளிகள் பேசின. இருவர் கூடினால் அல்லி சுடு படுவாள். அவள் போட்டிருக்கிற ரவுக்கை அடிபடும். ஆவள்.குளிக்கின்ற சோப்புத் தேயும், சினிமாவைவிட