பக்கம்:ஆடும் தீபம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

25


எழுந்தாள். விளக்கை ஏற்றினாள். இருப்பே நாலைந்து துணிமணிகள்தாம். அறந்தாங்கி செவ்வாய்ச் சந்தையில் எடுக்கப்பட்டவை. அவற்றை எடுத்துப் பையில் திணித்தாள். ஐந்தறைப் பெட்டியில் ஐம்பது ரூபாய் இருந்தது. நேற்று ஆயிங்குடிக் கோனாரிடம் இரண்டு ஆடுகளை விற்று முதல் வரவு. அதை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்,

“எங்கே போவது?

“கெட்டும் பட்டணம் சேர்’ என்கிறார்களே, அந்தப் பட்டணத்திற்குப் போனால் என்ன? கெட்டால்தான் அந்தப் பட்டணத்திற்குப் போகலாமா? கெடாமல் இருப்பதற்காகத்தானே அங்கே தொலையவேண்டும்? பட்டணத்தை ரொம்ப கேவலமாகச்சொல்கிறார்களே! அங்கேநடக்காத அயோக்கியத்தனங்களே இல்லையாமே? நாலெழுத்து இங்கிலீஷ் படித்திருந்தால்தான் ரிக்ஷாக்காரன் கூட வண்டியில் ஏற்றுவானாமே! தமக்கு நாலாம் கிளாஸ் வரை உள்ள தமிழ்தான் தெரியும். ஹ்ம்... அங்கே லக்ஷ ரூபாய் வாங்கும் நடிகர்களெல்லாம் இங்கிலீஷா படித்திருக்கிறார்கள்? அவர்களை எல்லாம் ரிக்ஷாக்காரன் ஏற்றாமலா இருந்திருப்பான்? ‘தமிழரசு வேண்டும் என்று ஒரு கட்சி கேடடுக்கொண்டிருப்பதாகவும், அதற்கு அபரி மிதமான ஆதரவு இருப்பதாகவும் நேற்று வெண்டியப்ப அண்ணன் பத்திரிகையிலிருந்து படித்துச் சொன்னாரே?... அங்கே தமிழைக்கொண்டே சமாளித்துக்கொள்ளலாம். அடிவாதத்திற்குப் பயந்துதானே அங்கே போகிகிறோம்? அதுமட்டும் ஊர் இல்லையா? அங்கு வாய் கொழுக்கப் பேசுபவர்கள் இல்லையா? மாங்குடியைத் தவிர,வேறு புலி வசிக்கும் ஊராக இருந்தாலும் தாக்குப் பிடித்து விடலாம்... ... ! -

விளக்கை அணைத்தாள் பன்னெடுங் காலமாக இந்த வீட்டில் எரிந்துகொண்டிருந்த விளக்கு அணைக்கப்பட்டு