பக்கம்:ஆடும் தீபம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஆடும்



விட்டது. ஒருமிக்க விளக்குத் திருநாள் எடுக்கும் சமயத்தில் இந்த வீட்டிலே விளக்கை அணைக்கும் புண்ணியத்தை ஊர் கட்டிக்கொண்டது.ஒரு குடியைக் கெடுத்தா ஊர்க்குடி வாழ்ந்து விட முடியும்? முதலில் தனக்கு ஒரு பெரிய குழியைத் தோண்டிக்கொண்டுதான் , ஒருவன் மற்றவன் குடிஇருக்கும் வீட்டின் குச்சைப் பிரிக்கின்றான்: இது யாருக்குத் தெரிகிறது? வரவர வாழ்க்கையின் நெருக்கடி மனிதனைக் குருடனாக்கிக் கொண்டு வருகிறது

பூட்டை எடுத்தாள். கதவைப் பூட்டினாள். சாவியை இடுப்பில் செருகிக் கொண்டாள். குறுஞ்சிரிப்பு உதடுகளில் மேவியது. வீடு வாசல், நிலம் நீச்சை எல்லாம் உதறி விட்டுப் போகும் போது வீட்டை எதற்காகப் பூட்ட வேண்டும்? சந்தைக்குப் போய்த் திரும்பி வரும் மாதிரி நினைத்துக்கொண்டு ஏன் சாவியைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்? இப்படித்தான் வைராக்கியம் எல்லாம். வேகத்தில் மனம் துணிந்து விட்டாலும், நீண்ட கால மாகக்கொண்டிருந்த பிடியை நழுவவிட அழுதுசாகிறது. பளிங்கில் பட்ட தண்ணீர் மாதிரி ஒட்டாமல்தான் நிற்கின்றன வாழ்க்கையும் வைராக்யமும். இனி இந்த வீட்டில் நாய் நுழைந்தால் என்ன? நரி நுழைந்தால் என்ன?

இடுப்பில் செருகிய சாவியை எடுத்துப் பூட்டில் சேர்த்து வைத்தாள். வைராக்கியத்தை வென்று விட்டது போன்ற ஒரு நிம்மதி, வாசற்படியை விட்டுத் தெருவில் இறங்கினாள்.

பட்டணத்துக்குப் போய் என்ன செய்வது?

கணக்கிட்டு வாழ்க்கையை முதலீடு செய்யச் சிலருக்குச் சந்தர்ப்பம் கிடைகிக்றது; பலருக்கு வாழ்க்கை தீர்க்க முடியாத பெரும் கடனாக இருக்கிறது. எல்லோரும்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/27&oldid=1389733" இலிருந்து மீள்விக்கப்பட்டது