பக்கம்:ஆடும் தீபம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

o


தீபம்

35

ينتي

இன்னாசி இன்னாசியாக இல்லை. வஞ்சிக்கப்பட்ட பசிக்காக வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் புலியாகிச் சுழன்றான். சாத்தையா வெறும் சாத்தையாவாக இல்லை. அவமதிக் கப்பட்ட "தான்’ என்னும் அகந்தையும் பணக் கொழுப்பும் அவனைப் பழிதீர்க்கும் ரத்தவெறியனாக மாற்றின. யார் கொலைக் கருவியை முதலில் எடுத்தது; யார் முதலில் குத்தியது என்று யாருக்கும் தெரியாது. அல்லிக் குக்கூடத் தெரியாது. அனைத்துக்கும் மெளன சாட்சியாக நின்ற அம்புலிக்கும் தெரியாது. அவ்வேளையில் தான் அது கருமேகத்துள் சிக்கித்திணற நேரிட்டிருந்தது. பிறகு வெண் முகத்தை அதுவெளியே நீட்டி நோக்கியபோது, இன்னாசியின் கத்தி சாத்தையாவின் விலாவில் குத்தியிருந்தது. சாத்தையாவின் வேல்கம்பு இன்னாசியின் வயிற்றில் புகுந்து நின்றது. இருவரும் ஒரே ரகம் என்பதைப் பொங்கிப் பிரவகித்த ரத்தம் செம்மையாய் எடுத்துக் காட்டியது.

அவளை மறந்து, சூழ்நிலைமறந்து, ஒருவரை வீழ்த்திவிட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு இயங்கிய அவ்வெறியர்களின் நிலை என்னவாகும் என்று ஆராயும் ஆசை அல்லிக்குக் கிடையாது. தான் தப்பிவிட வேண் டும் என்று தவித்த அவள் மெதுவாக நகர்ந்தாள். மெல்ல மெல்ல, பின்னாடியே நடந்தாள். அனைத்தையும் அம்பலப்படுத்தும் பால் நிலவில் கார்மேகம் கருமை கலக்கி இருளைக் கொட்டிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டாள்.அவள் போகவேண்டிய வழியில் திரும்பி வேகமாக நடந்தாள். வெறித்தனம் அவள் எதிரிகளுக்கு வேலி கட்டிவிட்டது. அம்புலி அடிக்கடி இருள் முடிப் போர்த்தி, அவளுக்குத் துணை செய்தது. சிறிதுதூரம் சென்றதும், அல்லி ஓடத்துவங்கினாள். பையும் பணமும் அவளிடம் பத்திரமாக இருந்தன. அவ்வேளையிலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/36&oldid=1243840" இலிருந்து மீள்விக்கப்பட்டது