பக்கம்:ஆடும் தீபம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஆடும்




ஏய், எந்த ஊருக்குப் போகிறே? டிக்கட் எங்கே?’’ அதிகாரக் குரல் கனமேற்று ஒலித்தது.

‘இல்லை’ என்று அலட்சியமாகச் சொன்னான் அவன் ,

‘ஏன் இல்லை? எங்கே போறதுக்காக வண்டி ஏறினே?”

1 * *

“ஏனில்லை என்றால் எடுக்கவில்லை; அவ்வளவுதான் என்று நாடகத் தோரணையில் பேசினான் அவன் . “ஏண்டா எடுக்கல்லே? இது என்ன உங்க அப்பன் வீட்டு ரயிலா?’ ’

  • யாரு அப்பன் வீட்டு ரயிலுமில்லை’ என்று முனகினான் அவன். ‘வீண் கதை எதற்கு? நீ எங்கே போகனும்?” “மதராஸ்...’ பரிசோதகர் கணக்குப் பார்த்து ஒரு தொகையைக் குறிப்பிட்டார். உம்; பணத்தை எடு!” என்ற கட்டளையிட்டார்.

“என்னிடம் பணமிருந்தால் நான் டிக்கட்டே எடுத்திருப்பேனே? உங்களிடம் தெண்டம் அழனுமிங்கிற ஆசையா என்ன, மடியிலே பணம் வைத்துக் கொண்டு சும்மா வா!’ என்று கெண்டையாகப் பேசி, வில்லன்” சிரிப்பு சிரித்தான் அவன்,

‘வக்கத்த பயலுக்கு வாயைப் பாரேன்!’ என்று அவன் கன்னத்தில் ஓர் அறை கொடுத்தார் பரிசோதகர். ‘துரைகளுக்கு சீட் வேறே! ஜம்னு உட்கார்ந்து விட்டார். .....சீ, எழுந்திரு’ என்று சொல்லி, அவன் கழுத்திலே கைவைத்தார்.

‘என்மேலே கை போடாதே, ஸார்!’ என்ற முறைப்பு

அவனிடமிருந்து பிறந்தது.