பக்கம்:ஆடும் தீபம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஆடும்


என்று அலறினான் அவ்விளைஞன். ‘அவளுக்கு வெட்கம் எதுவும் இல்லைபோலிருக்கு!’ என்று ஒரு பெரிய அம்மாள் அபிப்பிராயப்பட்டாள்.

“நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்! “ என்றான் பாட்டைக் கதறியவன்.

தனது தனித்துவத்தினால் மாங்குடியில் விபரீதமான கருத்துக்களை விதைத்துப் பயிரிட்டு விட்டு ஓடிவந்த அல்லி, அதே பண்பினால் விதம் விதமான பேச்சுக்களை ஒடும் ரயிலிலே விளையச் செய்தாள். அவள் ஏன் அப்படிச் செய்தாள்? எண்ணமிட்டுச் செயல்புரியவில்லை அவள். அந்த நேரத்திய உணர்வு எதுவோ உந்தி விட்ட செயலாகத்தான் இருக்கமுடியும் அது. ஏன் அவள் அவ்விதம் செயலாற்றினாள் என்பதை அவளாலேயே விளக்க முடிந்திருக்காது. மனித உணர்ச்சியை இழந்து விடாத ஈர இதயம் இருந்தது அவளுக்கு. சமூகக் கொடுமைகளும், வாழ்க்கை வெயிலும், அனுபவ நெருப்புத் துண்டுகளும் அவ்வுணர்ச்சியை இன்னும் வறளடித்து விடவில்லை. மனித இயல்புடன் நடந்து கொண்ட அவள் செயலை மற்றவர்கள் தவறாக மதித்தால் அதற்கு அவளா பொறுப்பு? ‘ரொம்ப நன்றி!’ என்ற சொல் அவளருகே தெறித்தது. அவள் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவன் நின்றான், புன்னகையோடு.

“நீ செய்த உதவி சரியான காலத்தில் செய்த பெரிய உதவி’ என்றான் . ‘இது என்ன பிரமாத உதவி?” என்று முனங்கினாள் அவள். “என் பெயர் அருணாசலம், நான் மதராஸ் போகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/45&oldid=1244307" இலிருந்து மீள்விக்கப்பட்டது