பக்கம்:ஆடும் தீபம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 ஆடும்

பிரயாணிகளில் முக்கால் வாசிப்பேர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அநேகர் உட்கார்ந்த படியே சாமி ஆடி விழுவதும் எழுவதுமாக இருந்தார்கள். விழித் திருந்தவர்கள் ஒரு சிலரே.

அல்லியும் அருணாசலமும் தூங்கவில்லை. தங்களைப் பற்றியும், பொதுவாக வாழ்க்கையின் வஞ்சனைகள், உலகத்தின் பொல்லாத குணம், ஏமாந்தவர்கள்ஏமாற்றுகிறவர்கள் பற்றியும் பேசினார்கள். எந்த ஊரிலும் ஒரு பெண்-அதிலும், அல்லியைப் போன்ற வசீகரமுடைய இளம் பெண்-தனிமையாக வாழ்வது ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதுபோல்தான் என்று அவன் அறிவித்தான் , துணை இல்லாமல் தான் வாழ முயல்வது அபாயகரமானது என்றே அவள் உள்ளுணர்வும் கூறியது. அதற்காக வழியோடு போன எவனையோ நம்பி விடுவதா?’ என்று அவளது மனக் குறளி ஐயவினாபோட்டது. “நம்புவோம். நம்பினர் கெடுவதில்லை’ என்றது அவள் அறிவு.

ரயில் எழும்பூர் வந்து சேர்ந்தபோது அல்லியும் அருணாசலமும் வெவ்வேறு பெஞ்சுகளில் இருக்கவில்லை. பக்கத்தில் பக்கத்திலேதான் காணப்பட்டார்கள். ஒருவர் பின் ஒருவராக இறங்கி, ஒன்றாகச் சேர்ந்தே நடந்தார்கள்.

ரெயில் எழும்பூர் வந்து சேர்ந்ததும் அல்லிக்கு பிரமிப்பு அளித்தன. வெளியே வந்ததும், பெரிய ரஸ்தாவும், நாகரிக வாகனங்களும், பரபரப்பும், அவசரமயமான இயக்கமும் அவளைத் திகைப்புறுத்தின. தான் மட்டும் தனியாளாய் வ்ந்திருந்தால் திக்குமுக்காடித் தவிக்க நேரிட்டிருக்கும். நல்ல வேளையாக ஒரு துணை கிடைத்ததே என மகிழ்த்தாள் அவள் அவளாகவே அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/47&oldid=1252854" இலிருந்து மீள்விக்கப்பட்டது