பக்கம்:ஆடும் தீபம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 ஆடும்

அழைப்பை ஏற்று உள்ளே வந்தது அருணாசலம் அல்ல; “வாத்தியார் ராஜநாயகம்!

அவர் முகமெல்லாம் சிரிப்புப்பூத்துக் கிடந்தது. இதழ்கள் சிரித்தன. வெற்றிலைக் காவிஏறிய பற்கள் பளிச்சிட்டன. கண்கள் சிரித்தன.

படுக்கையில் சாய்ந்து கிடந்த அல்லி பதறி எழுந்தாள். ஆடையைச் சரிப்படுத்திக்கொண்டு ஒடுங்கி நின்றாள்.

“வாத்தியார் அறைக்கதவைச் சாத்திவிட்டு அவளைப் பார்த்தார். சிரித்தார். ‘என்ன அல்லி, எப்படி இருக்கிறே?’ என்று கேட்டபடி முன்னே நகர்ந்தார்.