பக்கம்:ஆடும் தீபம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம் 53

“திகு திகுவென்று எரிந்தது. ஒருத்தியை நடுவில் வைத்து, அவளைச்சுற்றி தத்தம் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் திண்டாடுவதை வண்டியிலே இருந்த மற்ற அலங்கார வல்லிகள் கவனித்துத் தமக்குள் லேசாகச் சிரித்துக் கொண்டனர். அவர்களுக்கு இந்தப் பட்டணத் துக்காரர்களின் பார்வை ஒன்றும் புதிதில்லை. பழகிப் புளித்துப்போன விஷயம்தான்.

கலைக்கூட”த்தில் வந்து இறங்கிய அல்லிக்கு அங்கு யாவுமே புதுமையாயிருந்தன. புது வர்ணத்தினவர்ணத்தினால் திகு திகுவென்று பிரகாசிக்கும் சுவர்களில் கலைகுடியிருந்தது. நடனத்தில் அரசனாகிய நடராஜன் தன்னைச்சுற்றி ஒளிரும் தீப்பிழம்பின் மையத்தில் நின்று நடனம் ஆடினான். அவன் அருகில் பெண்மைக்கு விளக்கம் தருவது போல் அன்னை சிவகாமி நின்றிருந்தாள். ராதையும் கண்ணனும் கை கோர்த்து நின்ற காட்சி காதலின் தத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது.

சுவரைப்பார்த்தவாறு மெய்ம்மறந்து கூடத்தில் நின்ற அல்லியிடம் விடைபெற்றுக்கொண்டு அருணாசலம் வெளியே போய்விட்டான். அவ்வளவு பெரிய வீட்டில்அந்தக் கலைக்கூடத்தில் அவள் ஒருத்தி மட்டும் நின்றி ருந்தாள்.கூட வந்திருந்த அலங்கார வல்லிகள் அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள்,

உள்ளே இருந்து வற்றிச் சருகாய்க் காய்ந்த உடலுடன் ஒரு கிழவி வெளியே வந்தாள். கூடத்தில் நின்றிருந்த அல்லியின் எதிரில் வந்து நின்று அவளை ஏற இறங்கப் பார்த்தாள். வானத்து நிலவு கீழே விழுந்து விட்டாற் போல இருந்தது அல்லியின் தோற்றம்.

நிலவுக்குக் கண்கள் உண்டா? செம்பவழவாய் உண்டா? முத்துப் பற்கள் உண்டா? மோகனச் சிரிப்புத்தான் உண்டா? ஒரே உருண்டையாய்த் தேய்ந்து, தேய்ந்து, இப்படிப் பொழுதுபோக்குவதுதான் அதற்குவேலையோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/54&oldid=1291254" இலிருந்து மீள்விக்கப்பட்டது