பக்கம்:ஆடும் தீபம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

57


‘தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியது தான்.ஆனால் உன் வயசு, காலம் எல்லாம் நீ தனியாக வாழ முடியாதென்று கூறுகின்றன. மீன்விழிகளும் எள்ளுப்பூ நாசியும், மாதுளை மொட்டன்ன இதழ்களும், முத்துப் பற்களும் கொண்ட நிலவு முகத்தினளாக ஒரு பெண் இருந்து விட்டால்,பேராசைக்கழுகுகள் கொத்திப் பிடுங்க வராமலிருக்குமா அல்லி? சமூகத்தில் நீ தகுந்த துணையுடன் வாழவேண்டும். கண்டவனை நம்பக் கூடாது. இந்த வீடு எனக்குச் சொந்தமானது. பெயருக்கும் புகழுக்கும் எனக்கொன்றும் குறைச்சல் இல்லை, எப்பொழுதோ என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாள்.அவள் வெறுமனேபோகவில்லை. அழகுப் பதுமை போல் ஒரு மகளை எனக்குக் கொடுத்து விட்டுத் தான் போனாள். என் மகள் ராஜவல்லி மேகத் திரளில் தோன்றும் மின்னல் கீற்றென பன்னிரண்டு வயசுக்குள் பரதக் கலையைப் பழுதில்லாமல் ஆடிஎன்னைக் களிப்பில் ஆழ்த்தி விட்டு நான்கு நாள் ஜுரத்தில் இறந்து விட்டாள்.

வாத்தியார் ராஜநாயகம் கண்ணீர் பெருக மகளை நினைத்துத் தேம்பினார். அல்லி திறந்த வாய் மூடாமல் அவர் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள.

மேல் துண்டினால் கண்ணீரைத் துடைத்து விட்டு ராஜ நாயகம் அவளை மீண்டும் ஆசை பொங்கப்பார்த்தார்.

‘வெறிச்சோடிப்போன என் வீட்டிற்கும்,வாழ்க்கைக்கும் நீ ஏன் ஆடும் தீபமாக இருக்கக் கூடாது, அல்லி?அன்று ரெயிலடியில் உன்னைப் பார்த்தபோதே என் இதயம் பொங்கி வழிந்தது. அந்த அருணாசலம் உன் கூட இருந்ததால்,என்உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டேன்.’

ராஜநாயகம் சற்று முன் மகளைப் பறிகொடுத்த தந்தையாக இருந்தவர், மூன்றாம் தர மனிதராக மாறிச் சாக