பக்கம்:ஆடும் தீபம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

59


நாயகம் படிகளில் இறங்கிச் சென்றார், மேலே வந்த போது இருந்த படபடப்பும், மன உளைச்சலும் குறைந்தவராக, தெளிந்த உள்ளத்துடன் அவர் செல்லுவதைக் கவனித்துவிட்டு அல்லி அவர் பின்னாலேயே கீழே சென்றாள்,

கூடத்தில் விளக்கேற்றப்பட்டிருந்தது. பசும் பொன்னைப் போல் மின்னும் வெண்கலத்தாம்பாளத்தில் நாச்சியாரம்மாள் முல்லை மலர்களைத் தொடுத்த மாலையைப் பந்து போல் சுருட்டி வைத்திருந்தாள். அரும்புகள் வெடித்து, மெல்லிய மணம் கூடம் முழுவதும் பரவியது.

‘நாச்சியாரம்மா, குழந்தைக்குத் தலைவாரிப் பின்னிப் பூச்சூட்டிவிடு. நம்ப ராஜவல்லியின் பட்டுச் சிற்றாடை ஒன்றை எடுத்து அல்லியிடம் கொடு. இன்றைக்குப் பாடம் ஆரம்பம் ஆகிறது. ஹும், சீக்கிரம்.’’ என்றவாறு வெற்றிலை சக்கையைத் துப்ப கொல்லைப்புறம் போனார் ராஜநாயகம்.

நாச்சியாரம்மாள் கொட்டக் கொட்ட கண்களை விழித்து அவரைப் பார்த்துவிட்டு, அல்லியையும் பார்த்தாள். வாத்தியாரின் பேச்சு, அல்லியின் நிதானம் முதலியவற்றைக் கண்டதும், வாத்தியார் பகலில் போட்டிருந்த திட்டம் தலைகீழாகி விட்டது என்பதை உணர்ந்து கொண்டாள்.

அரக்குப் பட்டுக்கட்டி, கண்களுக்கு மை தீட்டி, விற் புருவம் எழுதி, செஞ்சாந்தில் திலகம் வைத்து, மின்னற் கொடிபோல்வந்து. மன்றிலாடும் மணியாம் நடராஜரின் சிலைக்கு முன்னாள் நின்றாள் அல்லி,

மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு தேங்காய் உடைத்துச் சூடம் காட்டினார் வாத்தியார். சூடத்தை இரு கரங்களிலும் ஏற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டு நடராஜரின் முன்பாக வீழ்ந்து வணங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/60&oldid=1298490" இலிருந்து மீள்விக்கப்பட்டது