பக்கம்:ஆடும் தீபம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

63


ஆமாம்; அல்லிக்கும் வெளியே சுதந்திரமாகப் போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஐயாவுக்குப் பழக்கமான மனிதர் அருணாசலம், ஐயா ஒன்றும் சொல்ல மாட்டார் என்ற துணிச்சலுடன்,அல்லி வெளியே கிளம்பி விட்டாள்.

தெருக்கோடியை அடைந்ததும் அங்குவிரைந்துசெல்லும் டாக்ஸி'யைக் கைதட்டி அழைத்தான் அருணாசலம். இருவரும் ஏறி அமர்ந்தபின் பள பளவென்று நீல நிறத்தில் அன்னப் படகென அது தரையில்ஒடுவது தெரி யாமல் விரைந்தது. ஒரே வியப்பில் ஆழ்ந்து போன அல்லி சென்னை நகரத்தின் தெருக்களையே பார்த்து வந்தாள். அவளுக்கு வெகு அருகில் மிகமிகநெருக்கமாக அருணாசலம் உட்கார்ந்திருந்தது அவளுடைய மனசுக்குத் தெம்பாக இருந்தது. அவன் ஒருவனே அவளுக்கு எல்லாமாக விளங்கினான். ஆயிரம் உறவினர்கள் ஏற்படுத்த முடியாத ஒரு நிறைவை அவன் ஒருவன் அவளது. உள்ளத்தில் ஏற்படுத்தினான். நாட்டியம் என்ற பெயரில் ஒருமங்கை இடுப்பை வளைக்க முடியாமல்,கையைமட்டும் ஒயிலாக அசைத்தபடி நிற்கும் கோலத்தை சுவரொட்டி சினிமா விளம்பரத்தில் பார்த்த அவள் "களுக்"கென்று சிரித்தாள்.

“ சினிமாவில் நாட்டியம் என்றால் இப்படித்தான் இருக்குமா?’ என்று கேட்டவாறு அல்லி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

‘பெரும்பாலான படங்களில் நாட்டியம் இப்படித்தான் இருக்கும். உயர்ந்த நடனத்தை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்பது அவர்கள் எண்ணம். ஒரு வேளை உன்னைப் போல ஒரு நாட்டியக்காரி அவர்களுக்கு அகப்படவில்லையோ

என்னவோ?’ கையில் புகைந்து கொண்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/64&oldid=1299009" இலிருந்து மீள்விக்கப்பட்டது