பக்கம்:ஆடும் தீபம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

85


கிக் கொண்டே முகத்தை “உர்"ரென்று வைத்துக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தாள்.

அருணாசலம் சட்டைப்பையிலிருந்து சிகரெட்பெட்டியை வெளியே எடுத்தான். "லைட்" டரால் சிகரெட்டைப் பற்றவைத்தவாறு “நான் கொஞ்சம் பசை உள்ளவன் தான். ஒவ்வொரு சமயம் திடீரென்று வீட்டிலே சொல் லாமல் பட்டணம் வந்து விடுவேன்’ என்றான் ,

  • ஏன் அப்படி?’’ ‘நீ ஏன் திடுதிப்பென்று வீட்டை விட்டுக் கிளம்பினயாம்? உனக்குத் தெரியுமா, இப்படி நீ திடீரென்று பட்டிணம் போய் காரில் சவாரிசெய்து கொண்டே என்னுடையபூர்வ கதையைக் கேட்கப்போகிறாய் என்று. உலகத்திலே அப்படி அப்படித்தான் சில நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மதுரைப் பக்கத்துப் பசுமலைக்காரனுக்கும் தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த மாங்குடிப் பெண்ணுக் கும் நான்முகன் முடிச்சுப் போட்டு வைத்திருக்கிரேனே, நீயும் நானும் பின்னே எப்படித்தான் சந்தித்துக்கொள் கிறதாம்?...”* -

அல்லிக்கு அவனைப் புரியவில்லை. பசை உள்ள குடும் பத்து இளைஞன் பிரயாணச் சீட்டு இல்லாமல், ரெயிலில் பலர் முன்னிலையில் அவமானப்படுவது அவளுக்கு வேதனையாகவும், விசித்திரமாகவும் இருந்தது.

  • பணம் இருக்கிற நீங்கள், இல்லாதவர்களைப்போல ஏன் வேஷம் போட்டீர்களாம்? அன்று ரெயிலில் டிக்கட் பரிசோதகர் முன்பு பல்லை இளித்து உறுமினிர்களே? அபாரமாக இருந்தது.’ அல்லி பாதிகேலியாகவும் பாதிவருத்தமாகவும் பேசிளுள், அவள் முகத்திலே வேதனை நிழலாடியது. மையுண்ட கருவிழிகளின் ஓரத்திலே முத்துப்போல் கண்ணிர்த்