பக்கம்:ஆடும் தீபம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறி நான்கு


கண் கண்டதெல்லாம்


மாயை தானோ?

காரின் கதவைப் பிடித்துக்கொண்டு, தயக்கம் காட்டிய அல்லியைச் சற்று வியப்புடன் ஏறிட்டு நோக்கிய அருணாசலம் ‘வா, அல்லி. ஏன் அங்கேயே நின்று விட்டாய்? சும்மா வா. ‘’ என்றான்.

தானாகப் போகாவிட்டால் கையைப் பிடித்து அழைத்துப் போய்விடுவான் போல இருந்தது. பேச்சில் காட்டிய துடிப்பும் வேகமும் அப்படியிருந்தன.

மெல்லடி பெயர்த்து ஒவ்வொரு படியாக ஏறிய அல்லி, அருணாசலத்தைப் பின்தொடர்ந்து பிரம்மாண்டமான அந்தப் பங்களாவினுள் நுழைந்தாள். வழவழ வென்ற “மொஷெய்க் தள வரிசைகளில் கால்கள் சிரமமில்லாமல் நீந்துவது போலிருந்தன. -

விஸ்தாரமான ஹால்ஒன்றினுள் நுழைந்த பரமானந்தம் உடல் புதையும் வண்ணம் அமுங்கும் சோபா ஒன்றில் “தொப்'பென உட்கார்ந்தபடி ‘உட்காரம்மா அல்லி, நீயும் உட்கார் அருணாசலம்’ என்றார்.

ஏர் கண்டிஷன் செய்யப்பட்டிருந்த அவ்வறையின் சிலிர்ப்புணர்வினாலோ, அல்லது உள்ளத்துறையும் அச்சத்தின் உந்தலினாலோ அல்லியின் உடலில் லேசாக ஒரு நடுக்கம்!... கால் பெருவிரலில் பதித்த பார்வையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/71&oldid=1301674" இலிருந்து மீள்விக்கப்பட்டது