பக்கம்:ஆடும் தீபம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

ஆடும்


மறி திரைகடலின் வெண் மணலில் கால்கள் தோய நடந்த இருவரும் நீரும் நிலவும் கூடும் எல்லைகண்டனர். வெண்நுரை மலர்கள் பாதங்களை வருடிச் செல்லும் பொழுது அந்த ஸ்பரிசம் நெஞ்சத் துயரை இதமாக நீக்குவது போல இருந்தது.

அல்லி நினைத்தாள்: “ ... சுண்டக் காய்ச்சிய பாலில் கொம்புத்தேன் கலந்தாற் போன்ற சுவையோடு பழகிய தோழி செந்தாமரை.

மலர்ந்து குலுங்கும் மலர்த்தோட்டத்துக்கு அன்புக் காவலாக நின்ற வெண்டியப்ப அண்ணன். கருத்தைக் கன்னியரிடத்தில் சிதற விட்டுத் தன்னைத் தானே மாசுபடுத்திக்கொள்ளும் சுய துரோகி இன்னாசி.

திருவின் நோக்கினால் பண்பு பெறாமல், எவரும் தள்னிகரில்லையென்று இறுமாந்து திரியும் சிங்கப்பூர் சாத்தையா.

நட்பு முறிய, அன்பு ஒடிய, நள்ளிரவில் வீட்டை விட்டுப் புறப்பட்டு இரு வேங்கைகளிடையே சிக்கி மீண்டு வந்த தான், முற்றிலும் போக்கிரியாய்-பொய்யனாய்த் தோன்றிய அருணாசலத்தின் சொல்லுக்கு உட்பட்டு நடப்பதின் மர்மமென்ன? -

இன்னாசியை நினைத்தால் பீதி, சாத்தை யாவை எண்ணிணாலோ பயம் ஏறக்குறைய அவர்களை ஒத்தவன் தான் இவனும், சற்று நாகரீகமானவன் என்று வேண்டுமானால் கூறலாமேயொழிய மற்றபடி அவர்களுக்கும் இவனுக்கும் ஏதாவது வித்தியாசமிருக்கிறதா?......அரும்பு மீசையும், சுருண்ட கேசமும் வெளிப் பார்வைக்கு அழகுதான். கண்களின் போக்கிரித்தனத்தைக்கூட அவை கவர்ச்சி கரமாகவன்றாே மாற்றிவிட்டன!