பக்கம்:ஆடும் தீபம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

73


அந்த அழகில் நான் மயங்கிவிட்டேனா: இல்லை... ... ... இல்லை. வெளியழகில் மட்டும் நான் மயங்கவில்லை; அருணாசலத்துக்கும் இவர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.

மற்றவர்கள் ஊருக்கு உயர்ந்தவர்களாக வேஷம், உள்ளுக்குள் உலுத்தர்களாக --உளுத்தவர்களாக வாழ்ந்து வந்தார்கள்.

‘என்னிடம் பணமிருந்தால் நான் டிக்கெட்டேஎடுத்திருப்பேனே?’ என்றான் அருணாசலம், அன்றைய நிலையை கூசாமல் தெள்ளத் தெளியக் காட்டிக்கொண்டான். உண்மையில் வாழ்க்கை வசதியுள்ளவர் என்பது இப்பொழுதுதானே தெரிந்தது?...

பொய்யிலும் ஓர் உண்மை!-அதுதானே அவளை முதன் முதலில் பணப்பையை அவிழ்க்கச் செய்தது? சுருக்குப் பையின் முடிச்சை அருணாசலத்துக்காக அவிழ்க்கையில் கூடவே அவளுடைய இதயமும் அவளையறியாமலேயே திறந்துகொண்டு விட்டதோ? இல்லாவிட்டால் இரு போக்கிரிகளுக்கும் அபவாதப் புயலுக்கும் தப்பிவந்தவள், தனக்கு முற்றிலும் புதியதான சென்னையில் ஓர் ஆடவனை அதுவும் வழியில் சந்தித்தவனை எப்படி நம்பமுடியும்? நம்புவதோடு மட்டுமா? உள்ளம் என் இப்படிக் கரைந்து அவனுக்காக உருகுகிறது..?

காலின் அடியில் மண் கரைந்தது. அதே வேகத்தில் முழங்காலுக்கு மேல் உவர் நீர் ஏறியது.

“ என்ன அல்லி, நெனப்பு எல்லாம் எங்கே கிடக்கு?”

அருணாசலம் இரு கரங்களினாலும் அவளைப்பிடித்து இழுத்தான் அலைக்குப் போட்டியாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/74&oldid=1301705" இலிருந்து மீள்விக்கப்பட்டது