பக்கம்:ஆடும் தீபம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

ஆடும்


நானாக அல்லியைக் கூட்டிக்கிட்டுப் போயிருக்கிற தாகத் தானே நீங்க நினைக்கறிங்க?”

‘அவளாக வரமாட்டாளே?’’

‘அது எனக்குத் தெரியாது. ஆனா படத்திலே நடிக்க அவளுக்கு விருப்பம். அது எனக்குத் தெரியும்.பரமானந்தத்திடமும் ஒப்புக்கொண்டு விட்டாள். நாளைக்காலையில் அவர் ஸ்டுடியோவிற்கு வரச்சொல்லியிருக்கார்...!”

‘ஆ!...” ‘அதுமட்டுமா? அல்லியை நானே கட்டிக்கிடவும் போறேன்!”

இப்படிச் சொல்லி விட்டுப் பெருமிதத்துடன் இருதோள்களையும் குலுக்கி விட்டுக்கொண்டான் அருணாசலம்.

ராஜநாயகத்துக்குத் திகைப்பும் அருவருப்பும், ஒருங்கே ஏற்பட்டன. தான் குற்றம் புரிகையில் தன்னோடு சேர்ந்து பிறரும் குற்றமிழைக்கையில் அது வெகு நியாயமாகவே தோன்றுகின்றது. தோழமை பூண்டு திட்டம் வகுத்து சேர்ந்தே பாதகங்கள் செய்வதில் சலிப்பில்லை. தான் திருந்திவிட்டால், தரன்செய்த குற்றங்கள் பூதாகாரமாகத் தோற்றமளிப்பதோடு, நேற்றுவரையிலும் தோழனாக இருந்தவனின் கயமைத் தனமும், துடைத்த பளிங்கு பிரதிபலிப்பதுபோல் நன்றாகத் தெரிகின்றன.

பெண்ணைப் பெண்ணாகவே பாவிக்க அவருக்குக்கற்றுக் கொடுத்தவள் அல்லி. அவளது தலை அவர் பாதத்தில் தோய்ந்த அதே வேளையில் அதல பாதாளத்தில் உழன்று கொண்டிருந்த அவரது உள்ளமும் உயர்ந்துவிட்டது. உன்மையில் திருந்தியவன் ஒரு நாளும் தவறுவதில்லை, தனது சென்ற காலத்திற்காகவும், அருணாசலத்தின் தற்போதைய போக்கிற்காகவும் ராஜநாயகத்தின் உள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/79&oldid=1302718" இலிருந்து மீள்விக்கப்பட்டது