பக்கம்:ஆடும் தீபம்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

89


எப்பொழுதுமே பெற்றாேருக்கு அடங்காமல் ஊர் சுற்றும் பழக்கம் ஏற்பட்டது. குணத்தில் இருவருக்கும் ஏறத்தாழ ஒற்றுமை இருந்ததால் மற்ற விஷயங்களிலும் ஒன்றிப் பழகினார்கள். கையிலிருந்த காசு கரைந்தது. மேற்கொண்டு வாழ வழியில்லாது போகவே, வழக்கம்போல பெற்றாேரை நாடி வந்து விட்டான் அருணாசலம். அப்புறம் கடல்தாண்டி ஓடுவதில்லை என்று உறுதியும்செய்து கொண்டான். அங்கிருந்து வர அவன் பட்டபாடு அவனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்தது.

மல்லிகை அழகான மலர். அசாதாரணமான மணத்தை உடையதுதான். அன்னை பராசக்தியான ஜெகன்மாதாவின் முடிமீது இருக்கும்போது, பக்திப் பரவச உணர்ச்சியில் மணத்தைவிட்டு மலரைப் பிரிக்க முடியாததுபோல, அம்பிகையின் நினைவைவிட்டு நம்மைப் பிரிக்க முடியாத நிலையடைய விரும்புகிறோம். அதே மல்லிகை, கீழ்மகளான ஒருபெண்ணின் தலையில் இருக்கும் போது,சாத்தையாவைப் போன்றவர்களின் உணர்ச்சி எப்படிப் பாதிக்கப் படும்? இருவருமே பெண் இனத்தைச் சார்ந்தவர்கள். இருவர் முடிமீதும் இருப்பது ஒரே ஜாதிப்பூ மனிதனும் அவன் மனமும்தான் வித்தியாசம். காலமும் சூழ்நிலையும் மாற்றியமைக்கும் வல்லமை வாய்ந்தது. மல்லிகைப் பூவின் உபயோகத்தில் சாத்தையா இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவன். கெட்டிக்காரத்தனம் இருந்தது. ஆனால் பிரயோகிக்கும் வழிதான் தவறானதாக அமைந்து வந்தது.

என் அக்கா மகள்தான் அல்லி! என்று எல்லோரிடமும் கூசாமல் சொல்லி வந்த அருணாசலம் சாத்தையாவிடம் அந்தப் பொய்யைச் சொல்லவில்லை. அவனுக்கு அல்லியைத் தெரியலாம் என்று அவனது உள்ளுணர்வு கூறி