பக்கம்:ஆடும் தீபம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

ஆடும்


தான் அல்லிகூட பழகத் தொடங்கிக் கொஞ்ச நாட்களே ஆகியிருந்தனவென்றாலும், அவளைப் பற்றி மேலான ஓர் அபிப்பிராயம் அருணாசலத்தின் உள்ளத்தில் எழுந்திருந்தது. ஆகவே, அவன் விட்டுக்கொடுக்காமல் சட்டென்று உலகம் நாலும் சொல்லும் சாத்தையா. எல்லாவற்றையும் கேட்டு நடந்தால் அப்பனும் மகனும் கழுதை தூக்கின கதைதான். அல்லி அப்படிப்பட்டவளாகத் தோன்றவில்லை,” என்றான்.

இப்பொழுது பெரிதாகக் கொக்கரித்த சாத்தையா, என் மேலே பொறாமையோ, கோபமோ படாமல் இருந்தியானா சொல்றேன்: அல்லி என்னுடைய உடைமையாகி வெகுநாளாச்சு, அருணாசலம்’ என்று அலட்சியமாகத் தெரிவித்தான்.

நிஜமாகவா?....” “ஆமாம்; முன்னாலேயே மாங்குடியிலே அவள் பேரு கெட்டுப்போச்சு. அப்பனும் அம்மாவும் போனப்புறம் நான்தான் ஆதரிச்சேன். இந்த அல்லி சும்மாகெடக்காம, தன்னைப் பகிரங்கமாக கட்டிக்கணும்ன்னு ஆரம்பிச்சுது! என் அந்தஸ்தென்ன, ஆள்பலம் என்ன, குடும்ப கெளரவம் என்ன? இது நடக்குமா? எங்களுக்குள்ளே தகராறு ஆரம்பமாச்சுது; ஒரு நாள் பார்த்தா, கம்பி நீட்டிட்டா மகராசி. அப்புறம் நடந்ததெல்லாம்தான் உனக்குத் தெரியுமே?’ என்று முடித்தான் சாத்தையா.

பொய்யானாலும் சொல் வன்மையினால் மெய்யாகி விடும் என்பது உண்மை. தெளிவில்லாத உளைச்சலோடு கலங்கிப் போயிருந்த அருணாசலத்தின் மனக்குளத்தில் மதம் கொண்ட யானைபோல் இறங்கி சேற்றையும் மண்ணையும் கிளப்பி விட்டு விட்டான சாத்தையா. அருணாசலத்தின் உள்ளத்தில் அல்லியைப் பற்றிய வெறுப்பின் விதை